ஆப்பு வைத்த அதிமுக.. ஆதரவு காட்டும் திமுக! போனைப் போட்ட ஸ்டாலின்.. தேமுதிக கூட்டணி கிளைமேட் மாறுதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில் கூட்டணி கணக்குகள் தற்போது மாறத் தொடங்கி இருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை விலகலாம் என கூறப்படும் நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகலாம் என கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல் சில நிகழ்வுகளில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து வருவது அரசியல் கிளைமேட்டை மாற்றும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி எதிர்க்கட்சி தலைவர் வரிசையில் அமர்ந்தவர் விஜயகாந்த். அவரது இறுதி காலத்திலும் அவரது மறைவுக்குப் பிறகும் கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்தி செல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

Premalatha Vijayakanth DMDK DMK

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் கட்சி என்ற பெயரை மாற்ற தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருக்கிறார் பிரேமலதா. தேமுதிகவை இழுக்க பாஜக எடுத்து முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் 2026 தேர்தலிலும் அதிமுகவோடு தான் கூட்டணி என்ற நிலைப்பாடோடு இருக்கிறார்.

ஆனால் சில நாட்களாக அதிமுக கூட்டணிக்கும் தேமுதிகவுக்கும் சில பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பிரேமலதா விஜயகாந்த் மகனான விஜய பிரபாகரனுக்கு மாநிலங்களவை எம்பி சீட்டு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கும் தேமுதிக தரப்புக்கும் மோதல் இருப்பதாக கூறப்படுகிறது. ராஜ்யசபா சீட்டு கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையில் பிரேமலதா இருந்த நிலையில் ஒப்பந்தம் எதுவும் போடவில்லை என அதிரடியாக பேசினார் எடப்பாடி.

இதையடுத்து தனது முடிவை மாற்றி யோசித்து இருக்கிறார். அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டு தர அதிமுக இசைந்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் கடைசி வரை அதிமுகவுடன் பேசிவிட்டு கடைசி நேரத்தில் பாஜக கூட்டணிக்கு போன பாமகவுக்கு சீட்டு கொடுக்கும் நிலையில், கடந்த தேர்தல்களில் கூடவே இருந்த தங்களை அதிமுக உதாசீனப்படுத்தியதை தேமுதிக ரசிக்கவில்லை.

இதை அடுத்து பாஜகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம் என திமுக பக்கம் திரும்பி இருக்கிறார் பிரேமலதா என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதிமுகவை பொறுத்தவரை பாஜக, பாமக, தவெக, நாம் தமிழர் என பல கட்சிகளிடம் கூட்டணி பேரம் நடத்துவதாக கூறப்படுகிறது. தமிழக முழுவதும் தேமுதிகவுக்கு ஒரு அளவுக்கு வாக்கு வங்கி இருக்கிறது. வட மாவட்டங்களில் பாமகவுக்கும் தென் மாவட்டங்களில் பாஜகவுக்கும் எதிராக தேமுதிக இருக்கும் என யோசிக்கும் திமுக ராஜ்யசபா சீட்டை தரலாமா என யோசிக்கிறதாம்.

மேலும் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு, பட்ஜெட் என திமுகவை வெகுவாக பாராட்டினார் பிரேமலதா. மேலும் பிரேமலதா பிறந்த நாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுவே தேமுதிக திமுக கூட்டணியில் இணைவதற்கான அச்சாரம் என்கின்றனர். மாநிலம் முழுவதும் தேமுதிகவுக்கு மாவட்டம் முதல் கிளைக் கழகம் வரை நிர்வாகிகளும் தொண்டர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் தேர்தல் நேரத்தில் தேமுதிகவின் உதவி எந்த கட்சியாக இருந்தாலும் நிச்சயம் பலன் தருவதாக இருக்கும். அதிமுக உதாசீனப்படுத்தினால் நிச்சயம் திமுக கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் இணைவது உறுதி என்கின்றனர் அவர் கட்சி நிர்வாகிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+