சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!
சென்னை: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றத்தின் தாக்கம் இந்திய எரிபொருள் சந்தையிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ப்ரீமியம் வகை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதே நேரத்தில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாதாரண பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக ஈரான் மற்றும் வளைகுடா பகுதிகளில் நிலவும் போர்ப்பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, போர் தொடங்கிய கடந்த 19 நாட்களில் கச்சா எண்ணெய் விலை சுமார் 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் இஸ்ரேல் போர்
இந்த போர்ப்பதற்றத்தின் ஒரு பகுதியாக, சவூதி அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சர்வதேச எண்ணெய் சந்தையில் உடனடி அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக, 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 116.32 அமெரிக்க டாலர் வரை உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.10,700-ஐ கடந்துள்ளது. போருக்கு முன்பு இந்த விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 73 டாலர் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோர்மூஸ் நீரிணை
இதேபோல் ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் உலகளாவிய அளவில் எண்ணெய் விநியோகத்தில் கவலை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாக கருதப்படும் இந்த பகுதி பாதிக்கப்பட்டதால், பல நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு அழுத்தம் உருவாகியுள்ளது. ஐரோப்பா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் விலை உயர்வு
இந்த சூழ்நிலையில், இந்தியாவில் ப்ரீமியம் வகை பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எடுத்துள்ளன. குறிப்பாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கச்சா எண்ணெய் விநியோகத்தில் உடனடி தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், கூடுதல் சரக்கு கப்பல்கள் தொடர்ந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ப்ரீமியம் பெட்ரோல்
புதிய விலை உயர்வின் அடிப்படையில், டெல்லி நகரில் ஒரு லிட்டர் ப்ரீமியம் பெட்ரோல் ரூ.101.89-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் மும்பை நகரில் ஒரு லிட்டர் ப்ரீமியம் பெட்ரோல் ரூ.113.77-க்கு விற்பனையாகிறது. மேலும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்த நிறுவனத்தின் 'ஸ்பீடு' மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 'எக்ஸ்பி95' போன்ற ப்ரீமியம் பெட்ரோல் வகைகளின் விலையும் சராசரியாக ரூ.2.09 முதல் ரூ.2.35 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எரிபொருள் விலை
ஆனால், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாதாரண பெட்ரோல் விலையில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் சாதாரண பெட்ரோல் விலை உயர்த்தப்படாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ப்பதற்றம் நீடித்தால், எதிர்காலத்தில் சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளிலும் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். அதனால், உலகளாவிய எண்ணெய் சந்தை நிலவரம் இந்தியாவின் எரிபொருள் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்கின்றனர்.
-
அணு அட்டாக் நடக்கும்.. பல லட்சம் கோடி பெட்டிங்.. அணு பேரழிவு வரலாம்.. உலக சுகாதார மையம் வார்னிங் -
4 மணி நேரம் கூட ஆகல.. திமிராக மிரட்டிய ஈரான் ராணுவ அதிகாரியை.. குறிவைத்து தூக்கிய இஸ்ரேல்! -
போருக்கு நடுவிலும் கொட்டுது லாபம்! "அந்த" 90 கப்பல்கள்.. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ஆடிய கேம்! -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
ஈரானுக்குள் இறங்கும் அமெரிக்க படை? டிரம்ப் கையில் பெரிய பிளான்.. நீண்டகாலம் சண்டை நடக்க வாய்ப்பு -
மொத்த உலகத்திற்கே பிரச்சனை வரும்.. பார்க்க போறீங்க.. ஈரான் விடுத்த வார்னிங்.. கவனமாக இருங்க! -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
ஹார்முஸ் ஜலசந்தியை ஏன் மூடுறீங்க? ஈரானுக்கு எதிராக திரண்டு வந்த பிரிட்டன் - பிரான்ஸ் உள்பட 6 நாடுகள் -
முடிவுக்கு வரும் ஈரான் போர்? இஸ்ரேல் பிரதமர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
இந்தியாவுக்கு புது பிரச்சனை.. கத்தாரை விடாமல் தாக்கும் ஈரானால் தலைவலி.. போன் போட்ட மோடி.. பின்னணி -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர்












Click it and Unblock the Notifications