கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த "வசதி".. ப்ரீபெய்டு ஆட்டோ சேவை.. 1 கி.மீட்டருக்கு எவ்ளோ பாருங்க
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் புது வசதி ஒன்று பயணிகளின் நன்மைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
கடந்த வருடமே திறந்திருக்க வேண்டிய கிளாம்பாக்கம் பேருந்து முனையம், இப்போதுதான் திறக்கப்பட்டுள்ளது.. இந்த ஒரு வருட காலமாகவே சீரமைப்பு மற்றும் வடிகால் வசதி பணிகள் நடந்தன. ஆனாலும் முழுமையான வசதிகள் இன்னும் இந்த ஸ்டாண்டில் அமைக்கப்படவில்லை என்கிறார்கள்..

பஸ் முனையம்: கிளாம்பாக்கத்தில் ரயில்வே ஸ்டேஷனை திறந்தபிறகு, பஸ் ஸ்டாண்டை திறந்திருக்கலாமே? இவ்வளவு சீக்கிரம் பஸ் முனையத்தை திறந்துவிட்டால், வடசென்னை உள்ளிட்டவர்கள் எப்படி கிளாம்பாக்கம் வர முடியும்? மெட்ரோ வசதி இல்லாதவர்கள் எப்படி கிளாம்பாக்கம் வர முடியும்? என்ற கேள்விகளும் எழுகின்றன.
அடிப்படையான மேலும் சில வசதிகளை உடனடியாக செய்துதர வேண்டும் என்ற கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன..
ரயில்வே ஸ்டேஷன்: கிளாம்பாக்கத்தில் இறங்கினால், பக்கத்திலிருக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல குறைந்தது ஒன்றரை கிலோமீட்டருக்கு போக வேண்டியிருக்கிறது.. கையில் மூட்டை முடிச்சுகள், குழந்தைகளுடன் அவ்வளவு தூரம் செல்லவும் முடிவதில்லை.. அதுமட்டுமல்ல, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ சேவை வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக ப்ரீபெய்டு ஆட்டோ வசதி தொடங்கப்பட்டுள்ளது... பயணிகளின் நலன் கருதி ப்ரீபெய்டு ஆட்டோ சேவை துவங்கப்பட்டுள்ளது, பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.. இந்த சேவை சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது.
ஆட்டோ தேவை: கிளாம்பாக்கம் வந்திறங்கும் பயணிகள் பஸ்களிலிருந்து இறங்கியவுடன் ஆட்டோ தேவைப்படுகிறது.. இவர்களுக்கு ப்ரீபெய்டு ஆட்டோ சேவை மையத்தில் எந்த இடத்திற்கு செல்லவேண்டும் என்பதை தெரிவித்தால் நிர்வாகமே ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 18 வீதம் வாடகை நிர்ணயம் செய்து ஆட்டோ புக்கிங் செய்து தந்து வருகிறார்கள்.. அதுமட்டுமல்ல, உரிய நேரத்தில் ஆட்டோ நேரடியாக வந்து பயணிகளை அழைத்து செல்லும்விதமாக இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது.
இந்த சேவையில் இணைவதற்கு 18 ஆட்டோ தொழிற்சங்கங்களை சேர்ந்த 1,400 ஆட்டோவிற்கான ஆவணங்களை வைத்து மனு அளித்திருந்தனர். அதில், 194 ஆட்டோக்களை தேர்ந்தெடுத்து இந்த ப்ரீபெய்டு ஆட்டோ சேவை துவங்கப்பட்டிருக்கிறது.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் செயல்படுவதைபோலவே, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலும் ப்ரீபெய்டு சேவை துவங்கப்பட்டு உள்ளது, பயணிகளிடையே மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.
ப்ரீபெய்டு ஆட்டோ: முன்னதாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் வசதிக்காக பிரீபெய்டு ஆட்டோ சேவையை உடனடியாக துவங்க வேண்டும் என சிஎம்டிஏ மற்றும் போக்குவரத்து துறைக்கு தமிழக அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் பொது செயலர் எம்.ஜி. அழகேசன் மனு அளித்திருந்திருந்தனர்..
கிளாம்பாக்கத்தில் பிரீபெய்டு சேவையில் இணையும் ஆட்டோ தொழிலாளிகளுக்கு உரிய அதிகாரிகள் கையெழுத்துடன் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்றும் ஆட்டோ இயக்க, 1,000 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications