சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 கூடுதல் நீதிபதிகள் நியமனம்! குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு!
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நான்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த மார்ச் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

அந்தப் பரிந்துரையை பரிசீலித்த குடியரசுத் தலைவர் அதனை ஏற்கும் விதமாக நான்கு பேரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஆணை பிறப்பித்தார்.
இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றங்களில் நாளுக்கு நாள் வழக்குகள் அதிகமாகிக் கொண்டே செல்வதால் வழக்கு விசாரணைக்கும், தீர்ப்பு கிடைப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
இதனால் தான் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை கொலிஜியம் முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது.
உயர்நீதிமன்றத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாவட்ட மற்றும் சப் கோர்ட்களிலும் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களும் பல இடங்களில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications