நல்ல ஆரோக்கியம், அமைதி, வளம்.. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புத்தாண்டு வாழ்த்து
சென்னை: தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இன்று உலகெங்கும் உள்ள தமிழர்களால் சித்திரை 1ஆம் தேதி, தமிழ்ப் புத்தாண்டு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காலை முதலே முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நல் வாழ்த்துகள். இந்த புனித நாள் அனைவருக்கும், நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டு மட்டுமின்றி இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களால் இன்று யுகாதி, குடி பத்வா, சஜிபு செராவோபா, நவ்ரே மற்றும் சேட்டி சந்த் ஆகியவையும் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மாநில மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications