ஆளுநரை விஜய் சந்தித்துவிட்டார்.. ஆனாலும் ஆபத்து தொடர்கிறது.. தலைக்கு மேலே தொங்கும் கத்தி
சென்னை: தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரியிருக்கிறார். ஆனாலும் டிடிவி தினகரனின் புகார் காரணமாக தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பு இருக்கிறது.
பெரும்பான்மை பெற்ற கட்சி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை என்றாலோ, பெரிய கட்சியை ஆளுநர் அழைக்கவில்லை என்றாலோ, குடியரசுத் தலைவர் ஆட்சி அமையவே அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல விஜய் உரிமை கோரியிருந்தாலும், டிடிவி தினகரன் முன்வைத்திருக்கும் குதிரை பேர புகார், தவெக ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிந்து, புதிய அரசு அமையவில்லை எனில், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356-ன் கீழ் ஆளுநர் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்வார். இதன் மூலம் மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் நேரடியாக ஆளுநரின் கைக்குச் செல்லும்.
அதேபோல, தற்போது பதவியில் இருக்கும் முதலமைச்சர் 'தற்காலிக முதலமைச்சராக' நீடிக்க முடியாது. சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிந்துவிடுவதால், அமைச்சரவை தானாகவே கலைந்துவிடும்.
எனவே, புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தும், யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை எனில், சட்டமன்றம் முடக்கி வைக்கப்படும். நீண்ட காலம் இதே நிலை நீடித்தால், ஆளுநர் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு மறுதேர்தலுக்கு உத்தரவிடுவார். இது ஆதரவு கேட்கவில்லை என்றால்தான். விஜய்தான் ஆதரவு கேட்டுவிட்டாரே!
இருப்பினும் தவெக மீது குதிரை பேரம் குற்றச்சாட்டை டிடிவி வைத்திருக்கிறார். இது குறித்து விசாரணை மேற்கொள்ளவும் ஆளுநரை அவர் கேட்டிருக்கிறார. விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானால் தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படும. அவரது பதவி பறிக்கப்படும். இப்படியாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய வாய்ப்பு இருக்கிறது
-
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications