சென்னை அருகே குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது பொங்கல் பரிசு பொருட்களா? இலவச வேட்டி சேலைகளா?
சென்னை: சென்னை அருகே பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்பட வேண்டிய பொங்கல் பரிசு பொருட்களை குப்பை வண்டிகளில் எடுத்துச் சென்றதாக சர்ச்சை வெடித்திருக்கிறது. ஆனால் வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டது பொங்கல் பரிசு பொருட்கள் அல்ல இலவச வேட்டி-சேலை மூட்டைகள் என வட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு சார்பில் ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த இலவச வேட்டி- சேலைகள் தயாரிப்பு, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட நெசவாளர்களுக்கு ஆதரவு தரக் கூடிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. உதாரணமாக நடப்பாண்டில் ஈரோட்டில் மட்டும் 1.32 கோடிக்கான இலவச வேட்டி-சேலைகள் வழங்க ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வேட்டி- சேலைகள் இதுவரை இல்லாத வகையில் புதிய வண்ணங்களில் வடிவங்களில் வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசின் சார்பில் 228 விசைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம் மூலம் 65 ஆயிரம் விசைத்தறிக்கும் மேல் இந்த வருடம் ஒரு கோடி சேலையும், ஒரு கோடியே 20 லட்சம் வேஷ்டியும் உற்பத்தி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. அக்டோபர் 2-ம் வாரத்தில் இருந்து வேட்டி உற்பத்தி தொடங்கி, நவம்பர் முதல் வாரத்தில் இருந்து சேலை உற்பத்தி தொடங்கி ஈரோடு, திருச்செங்கோடு, திருப்பூர் மற்றும் கோவை சரகங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மொத்த உற்பத்தியில் 80 சதவீதத்துக்கு மேல் ஈரோடு மற்றும் திருச்செங்கோடு சரகங்களில் பெரும்பாலான விசைத்தறிகள் மூலம் பிரதான தொழிலாக 4 முதல் 5 மாதத்திற்கு உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதத்தை நம்பி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் வேட்டி-சேலை உற்பத்தி பெருமளவு முடிவடைந்துவிட்டது. நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிற வேட்டி-சேலைகள் அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் மூலமாக ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. அத்துடன் தமிழக அரசு நடப்பாண்டில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ1,000 ரொக்கம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் இருந்தது. பல்வேறு அரசியல் கட்சியினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கரும்பும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ5,000 வரை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அருகே பூவிருந்தவல்லியில் பொங்கல் பரிசு பொருட்கள், இலவச வேட்டி சேலைகளை முன்வைத்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பூவிருந்தவல்லியில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு பொருட்கள், இலவச வேட்டி சேலைகள் ஆகியவை குப்பைகளை அள்ளும் வண்டிகளில் கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வீடியோக்களும் வெளியிடப்பட்டன. அந்த வீடியோக்களில் குப்பைகளை அள்ளக் கூடிய டிராக்டர் ஒன்றில் மூட்டை மூட்டையாக ஏற்றப்படுகிற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது சமூகவலைதளங்களிலும் பகிரப்பட்டு விவாதப் பொருளானது.
இதனையடுத்து டிராக்டர்களில் கொண்டு செல்லப்பட்டவை அரசின் இலவச-வேட்டிசேலை மூட்டைகள்தான்; பொங்கல் பரிசு பொருட்கள் தொகுப்பு அல்ல அப்பகுதி வட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இலவச-வேட்டி சேலை எடுத்துச் செல்லப்பட்ட டிராக்டர், குப்பை அள்ள பயன்படுத்தப்படுகிறதா? என்பது தமக்கு தெரியாது; இது தொடர்பாக விசாரித்து வருகிறோம் எனவும் வட்டாட்சியர் கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications