திமுகவினர் கொள்ளையடித்த பணத்தை வசூலித்து மக்களுக்கே கொடுப்போம்.. இது உத்தரவாதம்: மோடி பேச்சு
சென்னை: மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை அவர்களிடம் இருந்து வசூலித்து திரும்பவும் மக்களுக்கே கொடுப்போம் இது மோடியின் உத்தரவாதம் என்று கூறினார்.
பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் இருந்து நந்தனத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு கார் மூலம் சென்ற மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பாஜக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "வணக்கம் சென்னை. திறமை, வர்த்தகம், பாரம்பரியம் ஆகியவற்றின் மையப்புள்ளியாக சென்னை திகழ்கிறது. எனக்கும் தமிழ்நாட்டுக்குமான உறவு மிகவும் பழமையானது. சென்னை வரும்போதெல்லாம் உற்சாகம் அடைகிறேன்.
தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவு பெருகுவதால் சிலர் அச்சம் அடைகின்றனர். சென்னையில் வளர்ச்சி திட்டங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. சென்னையில் மெட்ரோ, விமான நிலையங்கள் என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்னெத்து வருகிறோம்.
குடும்ப அரசியல் கட்சிகள் குடும்பத்துக்காக அரசியல் செய்கின்றன. நான் நாட்டு மக்களுக்காக பணியாற்றுகிறேன்.
கல்பாக்கத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஈனுலையை பார்வையிட்டேன். காங்கிரஸ் ஆட்சியில் 18,000 கிராமங்களில் மின்சாரமே இல்லை. மோடி ஆட்சியில் 1 லட்சம் வீடுகளுக்கு மின் வசதி ஏற்படுத்தி தந்தோம்.
மத்திய அரசு திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு செல்வதால் திமுகவுக்கு கவலை. வளர்ச்சி திட்டங்களில் ஊழல் செய்ய முடியவில்லை என்பது திமுகவின் வருத்தம். தமிழ்நாட்டுக்காக மத்திய அரசு அயராது பணியாற்றி வருகிறது. கழிப்பறைகள், எரிவாயு இணைப்புகள், குடிநீர் இணைப்புகள் அனைத்து பணிகள் நடக்கின்றன. வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு செல்வதால் திமுகவின் ஒரு குடும்பம் வருத்தப்படுகிறது.
மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக அரசு. ஸ்டிக்கர் ஒட்டினாலும் திமுகவினருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணத்தை மோடி கொள்ளையடிக்க விடமாட்டேன். திமுக கொள்ளையடித்த பணம் தமிழ்நாட்டு மக்களுக்கே செலவழிக்கப்படும் என்பது மோடி உத்தரவாதம் என்று மோடி தெரிவித்தார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications