20,000 வீரர்கள்! குஜராத் முதல்வராக இருந்தபோது.. புகழ்ந்த ஸ்டாலின்! பூரித்த பிரதமர் மோடி! சுவாரசியம்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பிரதமர் மோடியைப் பாராட்டி முதல்வர் ஸ்டாலின் பேச, அதைக் கேட்டு பிரதமர் மோடி பூரித்துப் போனார்.
Recommended Video
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளைக் கடந்த நான்கு மாதங்களாகவே தமிழக அரசு மிகத் தீவிரமாகச் செய்து வந்தது. செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில் தமிழர் பெருமை மற்றும் தமிழக கலசாராதத்தை பறைசாற்றும் வகையிலான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை பல்வேறு நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டினரைக் கண்டு ரசித்தனர்

முதல்வர் ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தீபத்தை இளம் கிரான்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ஏற்றினார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்குக் கிடைப்பது பெருமை என்று தெரிவித்தார். இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் நாளாக இது அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், தொடக்க விழா எழுச்சியோடு நடைபெறுகிறது. என்றும் 18 மாதங்களில் நடைபெற வேண்டிய ஏற்பாட்டுப் பணிகளை 4 மாதங்களில் முடித்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி
மேலும், இந்தப் போட்டிகள் முதலில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற இருந்தது என்றும் அந்த வாய்ப்பை சென்னை எப்படிப் பெற்றது என்பதையும் அவர் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து அவர் பிரதமர் மோடி குறித்தும் பேசினார். கொரோனா தொற்றால் பிரதமரை நேரில் சென்று அழைக்க முடியாமல் போய் விட்டது என்ற முதல்வர் ஸ்டாலின், நீங்கள் ஓய்வெடுங்கள் நான் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் எனப் பெருந்தன்மையோடு தெரிவித்ததாகவும் கூறினார்.

புகழ்ந்த ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைக்கப் பிரதமர் மோடி தான் மிகச் சரியான நபர் என்று குறிப்பிட்ட முதல்வர் அதற்கான காரணத்தையும் விளக்கினார். "குஜராத் முதல்வராக நீங்கள் இருந்தபோது 20 ஆயிரம் வீரர்கள் கலந்து கொள்ளும் வகையில் மாபெரும் செஸ் விளையாட்டுப் போட்டியை நடத்தி உள்ளீர்கள். பூட்டான் அரசு குடும்பத்தினர் இங்கு வரும்போது, அவருக்கு செஸ் செட்டை பரிசாக வழங்கினீர்கள். எனவே, செஸ் போட்டியை இந்தளவுக்கு ஆதரிக்கும் நீங்கள் செஸ் ஒளிம்பியாட்டை தொடங்க வந்துள்ளது மிகவும் பொருத்தம்" என்றார்.

பூரித்த பிரதமர்
தான் குஜராத் முதல்வராக இருந்த போது நடத்திய நிகழ்ச்சி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதும், பிரதமர் மோடி பூரித்துப் போனார். அது அவரது முகத்திலும் மகிழ்ச்சியாக வெளிப்பட்டது. முதல்வர் பேச்சை ரசித்த பிரதமர் மோடி, ஸ்டாலின் பேசி முடித்துவிட்டு வந்த போது, கை கொடுத்துப் பாராட்டினார். அதைத் தொடர்ந்து தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

குஜராத் செஸ்
Swarnim Chess Mahotsav 2010 Gujarat என்ற பெயரில் கடந்த 210ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத்தில் செஸ் போட்டிகள் நடைபெற்றது. கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போட்டியில் சுமார் 20 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். உலகிலேயே அதிக விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு செஸ் போட்டி என்ற சாதனையை இது படைத்தது.












Click it and Unblock the Notifications