சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் பிரதமர் மோடி- விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புக்கு ஏற்பாடு

Google Oneindia Tamil News

சென்னை: பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

பிரதமர் மோடி காலை 10.35 மணியளவில் சென்னை வந்தடைகிறார். உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ரூ4,486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ரூ3,640 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார். சென்னை கடற்கரை- அத்திப்பட்டு இடையேயான 4-வது ரயில் பாதையில் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் .

Prime Minister Modi leaves Delhi for Chennai

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜூன் டாங்கியை தேசத்துக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி. இந்திய தொழில்நுட்ப கழகத்தின் டிஸ்கவரி வளாகத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். கல்லணை கால்வாய் சீரமைப்பு-புதுப்பித்தல் திட்டத்துக்குஅவர் அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னையில் காலை 8 மணி முதல் பகல் 1 மணிவரை போக்குவரத்துகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

 பிரதமர் மோடி இன்று காலை சென்னை வருகை... நகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு! பிரதமர் மோடி இன்று காலை சென்னை வருகை... நகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு!

பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

English summary
Prime Minister Modi left Delhi this morning by private plane for chennai to launch various completed projects and lay the groundwork for new projects
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X