பிரதமர் மோடிக்கு பிடித்த 4 விளையாட்டுக்கள்.. இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே! மன் கி பாத்தில் பேச்சு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தனக்கு 4 விளையாட்டுக்களை பிடிக்கும் என்று கூறி மனதில் குரல் உரையில் பேசி இருக்கிறார். அந்த 4 விளையாட்டுக்கள் எவை?
இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மனதின் குரல் பகுதிகளில் நாம் நமது இளைய தலைமுறையினரின் திறமைகளைப் பற்றி விவாதிக்க சந்தர்ப்பங்களை அமைத்துக் கொண்டு வருகிறோம். இன்று, விளையாட்டுத் துறை என்பது, நமது இளைய விளையாட்டு வீரர்கள் புதிய புதிய வெற்றிகளைத் தொடர்ந்து ஈட்டி வரும் ஒன்றாகும்.

ஒரு போட்டியிலே, நமது விளையாட்டு வீரர்கள் தேசத்தின் கொடிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். சில நாட்கள் முன்பாக சீனாவில் உலக பல்கலைக்கழக விளையாட்டுக்கள் நடந்தன. இந்த விளையாட்டுப் போட்டிகளில், இந்த முறை பாரதம் இதுவரை நிகழ்த்திராத சாதனைச் செயல்பாட்டினைப் புரிந்திருக்கிறது.
நமது விளையாட்டு வீரர்கள் மொத்தம் 26 பதக்கங்களை வென்றிருக்கிறார்கள், இதிலே 11 தங்கப் பதக்கங்கள். 1959 முதல் இன்று வரை எத்தனை உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நடந்திருக்கின்றனவோ, அவற்றில் பெற்ற அனைத்துப் பதக்கங்களைக் கூட்டினாலும் கூட, மொத்தம் 18 தான் வருகிறது.
இத்தனை தசாப்தங்களில் வெறும் 18 மட்டுமே; ஆனால் இந்த முறை நமது விளையாட்டு வீரர்கள், 26 பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். அந்த வகையிலே, உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இளைய வீரர்கள், மாணவர்கள் சிலர் இப்போது தொலைபேசி வாயிலாக என்னோடு இணைந்திருக்கிறார்கள்.
நான் முதன்மையாக இவர்களைப் பற்றி உங்களிடம் கூறி விடுகிறேன். யுபியில் வசிக்கும் பிரகதி, வில்வித்தைப் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார். அசாம் மாநிலத்தில் வசிக்கும் அம்லான், தடகளப் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார். யுபியில் வசிக்கும் பிரியங்கா ரேஸ் வாக், அதாவது நடைப்பந்தயப் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார். மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த அபிதன்யா துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார்." என்று கூறிய மோடி இந்த 4 பேரிடமும் கலந்துரையாடினார்.
அப்போது தடகள வீரர் அம்லான், உங்களுக்கு எந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "விளையாட்டு உலகத்தில பாரதம் பெரிய மலர்ச்சியை அடைய வேண்டும். இதற்காக நான் இந்த விஷயங்களுக்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.
ஆனால் ஹாக்கி, கால்பந்தாட்டம், கபடி, கோகோ, இதெல்லாம் நம்ம மண்ணோட இணைந்த விளையாட்டுக்கள், எப்போதுமே, நாம் இதில் பின்தங்கி இருக்கக் கூடாது. அதே போல வில்வித்தையிலும் நம் வீரர்கள் நன்றாக செயல்படுவதை நான் கவனிக்கறேன். அதே போல் துப்பாக்கிச் சுடுதலிலும். இரண்டாவதாக நான் என்ன பார்க்கறேன் என்றால், நம் இளைஞர்கள், ஏன் குடும்பங்களிலும் கூட விளையாட்டுக்கள் மேல முதலில் இருந்த கருத்தும் உணர்வும் இப்போது இல்லை.
முன்பு எல்லாம் குழந்தைகள் விளையாடப் சென்றால் அதை தடுப்பார்கள். ஆனா இன்று காலம் ரொம்ப மாறிவிட்டது. நீங்கள் எல்லாரும் வெற்றி மேல வெற்றியை குவிக்கறீர்கள். இது, எல்லா குடும்பங்களுக்கும் கருத்து ஊக்கமாக அமைகிறது. ஒவ்வொரு விளையாட்டிலும், எதில் எல்லாம் நம் குழந்தைகள் பங்கெடுக்கிறார்களோ, அதில எல்லாம் ஏதோ ஒன்றை ஜெயித்து வருகிறார்கள்.
மேலும் இந்தச் செய்தி முக்கியச் செய்தியாக நாட்டு மக்களிடம் கொண்டு போயும் சேர்க்கப்படுகிறது, கண்ணுக்குத் தெரியும் வகையில காட்டப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகளில் விவாதப் பொருளாகிறது. சரி, எனக்கு உங்களோடு பேசியது மிகவும் நன்றாக இருக்கிறது. என் தரப்பில் இருந்து உங்கள் எல்லாருக்கும் பல பல பாராட்டுக்கள்." என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications