வேஷ்டி சட்டையில்... நேரு ஸ்டேடியத்தில் மாஸ் என்டரி கொடுத்த பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சிக்காக நேரு ஸ்டேடியம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
Recommended Video
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் முதல்முறையாக, சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்குகிறது.

இன்று முதல் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளது.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்கின்றனர். போட்டியில் தொடக்க விழா இன்று சென்னை நேரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். முதலில் குஜராத்தில் இருந்து மாலை 4.45க்கு சென்னை வர இருந்தார். இருப்பினும், சற்று தாமதமாக மாலை 5 மணிக்குப் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்
அதன் பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் அடையாறு ஐஎன்எஸ் கடற்கரை தளத்திற்கு வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாகப் பிரதமர் நரேந்திர மோடி நேரு ஸ்டேடியம் வந்தடைந்தார்.
வழி நெடுகிலும் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களைப் பார்த்து கை அசைத்தபடி உற்சாகமாகப் பிரதமர் மோடி நேரு ஸ்டேடியம் வந்தடைந்தார்.
செஸ் ஒலிம்பியாட் 2022க்காக பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடையான வெட்டி, சட்டையில் பங்கேற்று உள்ளார். குறிப்பாகச் சதுரங்க கட்டம் போட்ட கரை வேஷ்டி சட்டையைப் பிரதமர் மோடி அணிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications