காசி மேடு பல்சர் பாபு.. பைல்ஸ் வலி.. ஆன் தி வே டீக்கடை.. பைக்கில் ஏறி பாய்ந்து எஸ்கேப்!!
பிரபல ரவுடி பல்சர் பாபு தப்பி ஓடியதால் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை: டீ குடித்து கொண்டிருந்தபோது தப்பி ஓடிவிட்ட பல்சர் பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.
காசிமேட்டின் பிரபல கொள்ளையன்தான் 'பல்சர்' பாபு. அந்த ஏரியா பெரிய தாதா... இவர் மீது வழிப்பறி, கொள்ளை வழக்குகள் என கணக்கில்லாமல் உள்ளன. கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு திருட்டு கேஸில் பல்சர் பாபுவை போலீசார் வைது செய்து குண்டர் சட்டத்தில் புழலில் அடைத்தனர்.
[ என் மீதான பாலியல் புகார்கள் பொய்யானது, பதவி விலக மாட்டேன்: மத்திய அமைச்சர் அக்பர் ]

டீ வேண்டும்
ஆனால் திடீரென்று பாபுக்கு பைல்ஸ் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கூடவே 2 போலீசாரும் பாதுகாப்புக்கு இருந்தனர். நேற்று காலை 6 மணி இருக்கும். பல்சர் பாபுக்கு டீ குடிக்க வேண்டும் போல் இருந்தது.

பைக்கில் பாபு
அதனால் கூட இருந்த 2 போலீசாரிடம் ஒரு டீ வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து, இரண்டு போலீசாரும் பைக்கில் பாபுவை உட்கார வைத்து டீ கடைக்கு கூட்டி சென்றார்கள். அந்த டீ கடை ஆஸ்பத்திரிக்கு எதிரிலேயே உள்ளது. கடைக்கு வெளியே நின்று 3 டீ சொல்லி அதை வாங்கி குடித்து கொண்டிருந்தனர்.

சர்ரென பறந்தார்
பைக்கை வெளியே நிறுத்திய நேரத்தில், அதிலிருந்த சாவியை எடுக்க போலீசார் மறந்துவிட்டனர். டீ குடித்து கொண்டிருந்த பல்சர் பாபு, போலீஸார் அசட்டையாக இருந்த நேரம் பார்த்து மின்னல் வேகத்தில் பைக்கில் ஏறினார். பைக்கில் இருந்த துப்பாக்கியை பக்கத்தில் இருந்த ஒருவரிடம் கொடுத்துவிட்டு, சர்ரென பறந்தார்.

தனிப்படை அமைப்பு
டீ குடித்து கொண்டிருந்த மற்ற 2 போலீசாரும் அதிர்ச்சியில் அப்படியே நின்றனர். உடனடியாக உயரதிகாரிகளுக்கு இதுபற்றி அளிக்கப்பட்டது. விரைந்து வந்த டீ கடைக்கு கூட்டி சென்ற 2 போலீசாரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று தப்பி சென்ற பல்சர் பாபு இன்னமும் கிடைக்கவில்லை. இதனால் அவரை பிடிக்க தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications