நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான தனியார் பேருந்துகள்.. வயலூர் அருகே திக் திக் சம்பவம்!
சென்னை: தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலை, வயலூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 30 பயணிகள் பலத்த காயமடைந்தனர். பேருந்தின் ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததே விபத்துக்கான காரணமாகக் கூறப்படுகிறது.
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்தை நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதேபோல, கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூரை நோக்கியும் இரு தனியார் பேருந்துகள் இன்று காலையில் சென்று கொண்டிருந்தன. இப்பேருந்துகளில் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் என சுமார் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் வயலூர் அருகே சென்று கொண்டிருந்த இரு தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் தஞசாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்துக்குள் விழாமல் நூலிழையில் தப்பியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதில், இரண்டு பேருந்துகளின் முன் பக்கமும் அடையாளம் தெரியாமல் அப்பளம்போல் நொறுங்கின. பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவ, மாணவிகள் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதுகுறித்து, பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிகள் கூறுகையில், கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த பேருந்தின் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தார். மேலும், அவர் செல்போன் பேசிக்கொண்டே அதிவேகமாக பேருந்தை ஓட்டியதே இந்த விபத்துக்கான காரணம் என்றனர். மேலும், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பேருந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால் உயிர்ச்சேதமே ஏற்பட்டிருக்கும் என்றனர். தனியார் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications