தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது.. தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகள் இயக்கினால் லாபம் கிடைக்காது என தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை நாளை (1.09.2020) முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இதன்படி மாவட்டங்களுக்குள் பேருந்துகளை இயக்குவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் செய்து வருகிறது. 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 மாவட்டத்திற்கு மட்டும்

மாவட்டத்திற்கு மட்டும்

மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது என்று கூறிய தனியார் பேருந்து உரிமையாளர்கள், நாளை தனியார் பேருந்துகள் இயங்காது என்று அறிவித்துள்ளனர்.

50 சதவீத இருக்கை

50 சதவீத இருக்கை

ஏற்கனவே பெட்ரோல் டீசல் கட்டணம் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில் தனியார் பேருந்துகள் மாவட்டத்திற்குள் மட்டும் இயக்குவது எந்த வகையில் லாபகரமாக இருக்கும் என்பதே தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்தை இயக்க மறுப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதிலும் 50 சதவீதம் பேரை மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும் என்று சொல்வதையும் அவர்களால் ஏற்க முடியவில்லை.

மக்களுக்கு பலன் இல்லை

மக்களுக்கு பலன் இல்லை

தமிழகத்தில் பல்வேறு வழித்தடங்களில் அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டாலும், பல கிராமபுற மற்றம் நகர்புற வழித்தடங்களில் இப்போது அரசு பேருந்துகளுக்கு பதில் தனியார் பேருந்துகளே அதிகமாக இயக்கப்படுகின்றன. எனவே தனியார் பேருந்துகள் நாளை இயக்கப்படாவிட்டால் பேருந்தை இயக்க அரசு அறிவித்த உத்தரவால் தங்களுக்கு எந்த பலனும் இருக்காது என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

மக்கள் அரசுக்கு கோரிக்கை

மக்கள் அரசுக்கு கோரிக்கை

அரசு மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்கிற உத்தரவை மாற்றி மாநிலம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் இயக்கலாம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட எல்லை வரை பேருந்துகளை இயக்கினால் அங்கிருந்து நடந்து சென்று இன்னொரு மாவட்ட எல்லையில் பேருந்துகளில் மக்கள் ஏறத்தான் போகிறார்கள். எனவே அரசு தயவு கூர்ந்து மாநிலம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+