அரசு கேபிளுக்கு மாறிய ஆபரேட்டர்கள்.. தனியார் கேபிள் செய்த வேண்டாத வேலை! கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
திருச்சி: TACTV எனப்படும் அரசு கேபிள் டிவி சார்பில் தமிழகத்தில் கேபிள் டிவி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அரசு கேபிள் டிவி வளர்ச்சி அடைந்து வருவதால் சில தனியார் கேபிள் நிறுவனத்தினர் அதற்கு எதிராக மறைமுகமாக செயல்பட்டு வருகின்றனர் என குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் அரசு கேபிள் டிவி வயர்களை திருடியதாக தனியார் கேபிள் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பல ஆண்டுகால கோரிக்கையான வாரியத்தை அமைத்துக் கொடுத்து.
அதற்கு முதல் வாரிய தலைவராக தஞ்சை ஜீவா என்பவரை நியமித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பல ஆண்டுகளாக கேபிள் தொழிலில் நல்ல அனுபவம் கொண்டஅவர் பல்வேறு சீர்திருத்தங்களையும் தொழில் நுட்பக் கோளாறுகளையும் சரி செய்து வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி பல லட்சம் இணைப்புகளை கடந்துள்ளது.

அரசு கேபிள் டிவி
அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் 8 ஆண்டு கால கோரிக்கையான எச்டி உயர்வரையரை செட்டாப்பாக்ஸ், தடையில்லாத சிக்னல் மற்றும் தனியார் நிறுவனத்திற்கு நிகராக உள்ளூர் சேனல்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளது. இதனையடுத்து அரசு கேபிள் டிவியிலிருந்து கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக வெளியேறி தனியார் நிறுவனத்திற்கு சென்ற ஆப்பரேட்டர்கள் மீண்டும் அரசு கேபிள்டிவியில் இணைந்து கேபிள்டிவி சேவையை பெற்று பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அரசு கேபிள் வளர்ச்சி
அதே நேரத்தில் அரசு கேபிளுக்கு பல்வேறு மறைமுக தடைகள் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டுவது, அரசு கேபிளை கட் செய்வது என சில தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. அந்த வகையில், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வளர்ச்சியை பொருத்துக்கொள்ள முடியாமல் திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், சூக்கலாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திர சேகர் மகன் ரமேஷ் என்பவர் தனியார் நிறுவனமான ஜி.டி.பி.எல் சிக்னலை பொதுமக்களுக்கு வழங்கி வந்துள்ளார்.
கேபிள் லைன் திருட்டு
இதற்கிடையே அப்பகுதி கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் தனியார் நிறுவனத்தை விட்டு விலகி அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், அரசு கேபிளுக்கு ஆபரேட்டர்கள் செல்வதை தடுக்கும் விதமாக வைரிசெட்டிபாளையம் முதல் முத்தையா பாளையத்திற்கு இடையில் அரசு கேபிள் டிவி சிக்னல் செல்லும் ஒயரினை 28.10.2025 அன்று இரவு 8.30 மணியளவில் துண்டித்து திருடி சென்றுள்ளார்.
ஜிடிபிஎல் ஆபரேட்டர் கைது
இந்நிலையில், அரசு கேபிள் டிவி பல இடங்களில் வராததால் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டது. தொடர்ந்து விசாரணையில் ரமேஷ் கேபிளை துண்டித்தது தெரிய வந்தது. இதனையடுத்து சிக்னல் துண்டிப்பு தொடர்பாக அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர் தங்கராசு மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் துணை மேலாளர்/தனிவட்டாட்சியர் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் 2.11.2025 அன்று தனியார் நிறுவன கேபிள் டிவி அப்ரேட்டர் ரமேஷ் என்பவரை உப்பிலியபுரம் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications