எம்-சாண்ட் உற்பத்தி.. தனிப்பட்ட குவாரிக்கு குத்தகை வழங்கப்படாது.. தமிழக அரசு புதிய கொள்கை வெளியீடு
தமிழ்நாட்டில் எம் சாண்ட் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை: தமிழ்நாட்டில் பல கட்டுமானங்கள் எம் சாண்ட்டை பயன்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், எம் சாண்ட் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கை இன்று வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் அனைத்து விதமான கட்டுமான பணிகளுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆற்று மணலே பயன்படுத்தப்பட்டு வந்தது. இருப்பினும், ஆற்று மணல் திருட்டு புகார்கள், அதிக விலை, மணல் கிடைக்கத் தாமதமாவது எனப் பல புகார்கள் இருந்தன.
இதையடுத்து மணலுக்குப் பதிலாக எம்-சாண்ட் பயன்படுத்தும் முறை அறிமுகமானது. தொடக்கத்தில் சிலர் தயக்கம் காட்டினாலும் கூட, இப்போது எம்-சாண்ட் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

முதல்வர் ஸ்டாலின்
ஆற்று மணலுக்குக் காத்திருக்காமல் எம்-சாண்டை பயன்படுத்துமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஏற்கவே வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல எம்-சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு அரசும் பல்வேறு சலுகைகளை வழங்கி வந்தது. இந்தச் சூழலில் எம் சாண்ட் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவது தொடர்பான புதிய கொள்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் எம் சாண்ட் உற்பத்தியில் தமிழக அரசின் கொள்கைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

எம் சாண்ட்
இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கட்டுமானப் பணிகளில் ஆற்று மணலுக்கு மாற்றாகச் சமீப காலமாக எம்.சேண்ட் உபயோகம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தரமற்ற எம்.சாண்டினை சந்தைகளில் விற்பனை செய்வதைத் தடுக்கவும், கண்காணித்திடவும் எம்.சாண்ட் தயாரிப்பு, தரம், விலை மற்றும் அவற்றைக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றை வரைமுறைப்படுத்த மாநில அளவில் கொள்கை ஒன்று தேவைப்படுகிறது.

இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது
தலைமுறைகளுக்கிடையேயான சம பங்கு கொள்கையினை உலக அளவில் ஏற்றுக் கொள்ளும் சூழலில் ஆறுகள், காடுகள், கனிமங்கள் மற்றும் பிற இயற்கை வளங்களை மனித இனத்தின் ஒரு தலைமுறைக்கு மட்டுமின்றி அடுத்தடுத்த தலைமுறைகளின் நலனுக்காகப் பாதுகாக்க வேண்டி செயற்கை மணல் (M-Sand) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கை 2023 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இன்றைய தேதியிலிருந்து இந்தக் கொள்கை நடைமுறைக்கு வருகிறது.

சிறப்பு அம்சங்கள்
ஆற்று மணலைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆற்றின் சுற்றுச்சூழலுக்குச் சேதம் ஏற்படுவதைத் தடுத்தல்.. ஆற்று மணலுக்கு மாற்றுக் கட்டுமான பொருளாக, தரமான செயற்கை மணல் அல்லது அரவை மணலின் பயன்பாட்டை ஊக்குவித்தல்... தமிழகத்தில் உள்ள செயற்கை மணல், அரவை மணல் உற்பத்தி தொழிற்சாலைகள் தொடர்புடைய சட்டங்களை முறையாகப் பின்பற்றச் செய்தல்.. உற்பத்தி தொழிற்சாலைகளின் ஒப்புதலுக்கான நடைமுறையை முறைப்படுத்துதல்.. கல் குவாரிகளை மட்டுமே நம்பியிருக்கும் மண் அரைக்கும்/உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெறுவதற்கு வழி வகை செய்தல்...

தனியாருக்கு அனுமதியில்லை
கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளை நேர்த்தியான முறையில் மறுசுழற்சி செய்வதை ஊக்குவித்தல்... மாநிலத்தில் கழிவு அற்ற (Zero Waste) சுரங்கம் மற்றும் குவாரிகளை ஊக்குவித்தல்... செயற்கை மணல், அரவை மணல் (M-Sand / Crushed Sand) உற்பத்தி செய்வதற்காகத் தனிப்பட்ட குவாரி குத்தகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. அதிகமான அளவு மணல் எடுத்தல் மற்றும் இயற்கை வளங்களின் குறைபாடு ஆகியவற்றால் ஆற்றுமணலுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய சுற்றுச்சூழல், நிலப் பயன்பாட்டுச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அவசியம் எழுந்துள்ளது.

தமிழக அரசு
எனவே, தமிழக அரசு, கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஆற்று மணலுக்கு மாற்றாகச் செயற்கை மணல், அரவை மணல் உற்பத்தியை அதிகரிக்கக் கருதுகிறது. மேலும், செயற்கை மணல், அரவை மணல் குவாரிச் செயல்பாட்டின் போது பயன்பாட்டிற்கு உதவாத கற்களிலிருந்தும் சிறிய அளவிலான கிரானைட் கற்களிலிருந்தும் தயாரிக்கப்படுவதால் குவாரிகளில் ஏற்படும் கழிவுகளின் அளவினை குறைப்பதற்குப் பயன்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக்












Click it and Unblock the Notifications