அன்பில் மகேஷை தொடர்ந்து, உதவியாளரிடம் நடந்த விசாரணை.. தோண்டித் துருவிய மத்திய குற்றப்பிரிவு போலீசார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனி​யார் பள்ளி அங்​கீ​கார மோசடி வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஷ் பொய்யாமொழியின் உதவியாளரிடம் சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​சார் நேற்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த திமுக ஆட்​சியின் போது, தனி​யார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்​கீ​காரம் வழங்​குதல், தடையில்லா சான்றிதழை உள்​ளிட்டவற்றை பெற்றுத் தரு​வ​தாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்​யப்​பட்​டதாக எழுந்த புகார் தொடர்​பாக சென்னை மத்​திய குற்​றப் பிரிவு போலீ​சார் வழக்குப்பதிவு செய்​தனர்.

anbil mahesh

இந்த வழக்​கில், தமிழ்​நாடு தனி​யார் பள்​ளி​கள் சங்க கூட்​டமைப்​பின் முன்​னாள் தலை​வர் பி.டி.அரசகு​மார் கடந்த ஜூன் 27 ஆம் தேதி கைது செய்யப்​பட்டார். அவர் மீது குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின் கீழும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. அவரது உறவினர்​கள் ஆரோக்​கிய​ராஜ், சுரேஷ் ஆகிய இரு​வரும் கைது செய்​யப்​பட்​டனர்.

தனியார் பள்ளிகளிடம் இருந்து இது​வரை 177 புகார்​கள் பெறப்​பட்​டுள்​ள​தாக​வும், சுமார் ரூ.100 கோடி வரை மோசடி நடை​பெற்​றுள்​ள​தாக​வும் காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது கிடைத்த தகவல்கள், ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்​பாக, அன்​பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்​புடைய 9 இடங்​களில் மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​சார் கடந்த 16 ஆம் தேதி சோதனை நடத்​தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, 18 ஆம் தேதி அன்​பில் மகேஷ் பொய்யாமொழியிடம் போலீ​சார் சுமார் 8 மணி நேரம் விசா​ரணை நடத்​தினர். அன்பில் மகேஷிடம் 248 கேள்விகளை போலீசார் எழுப்பி, அதற்கு பதில்களைப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்​நிலை​யில், அன்​பில் மகேஷ் பொய்யாமொழியின் உதவி​யாளர் அருண் பிர​காஷிடம் மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​சார் நேற்று விசா​ரணை நடத்​தினர். கடந்த திமுக ஆட்சி காலத்தில் அன்பில் மகேஷ் உதவியாளராக இருந்த அருண் பிரகாஷ் மூலமாகதான் பி.டி அரசகுமார் உள்ளிட்ட நபர்கள் தனியார் பள்ளி உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட நிலையில் விசாரனை நடைபெற்றது.

அவரிடம் கேட்​கப்​பட்ட கேள்வி​களும், அதற்கு அவர் அளித்த பதில்​களும் முழு​மை​யாக வீடியோ​வாக​வும் எழுத்​துப்​பூர்​வ​மாக​வும் பதிவு செய்​யப்​பட்​டுள்ளன. இந்த வி​சா​ரணை இரவு வரை நீடித்​த​தாக காவல்துறை வட்​டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+