பிரியா எலும்புல "ஓட்டை".. ஸ்குரூ போட்டாங்க.. அந்த டாக்டர் பேர் என்ன.. போலீசாரை திணறடித்த மாணவர்கள்
பிரியாவின் சடலத்தை கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது
சென்னை: பிரியாவுக்கு ஆபரேஷன் செய்தபோது, காலில் எதற்காக ஸ்க்ரூ போட்டனர்? டாக்டர் பேர் என்ன? ஏன் மறைக்கிறீங்க? என்று போலீசாரை உறவினர்கள் கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டனர்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயது மகள் பிரியாவுக்கு, கால்பந்து மீது தனி ஆர்வம் இருந்தது.. ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தி வந்தார்.
அதனாலேயே, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் இவருக்கு நிறைய கிடைத்தன.. இந்த சூழலில் பிரியா மூட்டு வலி பிரச்சினையால் அவதிப்படவும், சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.'

அட்வைஸ்
அப்போது, வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகியிருப்பதாக டாக்டர்கள் சொல்லியதுடன், ஆபரேஷனும் செய்ய வேண்டும் என்று அட்வைஸ் தந்துள்ளனர்.. அதன்படியே ஆபரேஷன் செய்து முடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வீக்கம் ஏற்பட்டது. இதனால், மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.. ஆனாலும் வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டதையடுத்து, வலது கால் அகற்றப்பட்டது... எனினும், தொடர் சிகிச்சையில் இருந்த பிரியா, இன்று காலை திடீரென உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் தோழிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அய்யோ பிரியா
பிரியாவின் சடலத்தை வாங்க மறுத்து, உறவினர்களும், தோழிகளும், மாணவர்களும், மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் இறங்கினர்... அவர்களை போலீசார் சமாதானப்படுத்த முயன்றனர்.. மேலும் தவறான சிகிச்சை குறித்து பேச முயன்றபோது, உறவினர்கள் கொந்தளித்துவிட்டனர்.. "ஆபரேஷன் செய்தது யார்? டாக்டர் பேர் சொல்லுங்க? ஏன் சார் டாக்டர் பேரை சொல்ல மாட்டேங்கறீங்க? ஏன் மறைக்கிறீங்க? பாப்பா உயிர் போயிருச்சே, இப்பவும் மறைச்சா எப்படி? எங்ககிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு..

எலும்புகள்
எதுக்காக எலும்புகளில் போல்ட், ஸ்க்ரு போட்டிருக்காங்க.. அந்த எக்ஸ்ரே எங்க கிட்ட இருக்கு.. அதை கூட உங்களிடம் காட்டறோம்... அந்த ஆஸ்பத்திரியில ஆபரேஷன் பண்ணுறதுக்கு முன்னாடி மருந்தை வாங்கிட்டு வர சொன்னாங்க.. அந்த பில்லையும் நாங்கள் காட்டறோம்.. இவ்வளவு தப்பு நடந்திருக்கு.. எதுவுமே பேச மாட்டேங்கறீங்க.. ஆபரேஷன் செய்த கேஸ் ஷீட் எங்கே?" என்று கதறி போலீசாரிடம் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்கள்.. இதனிடையே, பிரியாவின் அண்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, கடைசியாக கூட என் தங்கச்சி முகத்தை பார்க்கலயே என்று அழுது கொண்டே சொன்னார்.

ஹோல்ஸ்
"ஆசை ஆசையா ஜெர்சி கேட்டா.. சதைய கிழிச்சு சாவடிச்சிட்டாங்க.. எனக்கு போன் பண்ணி பேசினாள், அண்ணா எனக்கு ஒன்னுமே ஆகல.. நீ ஏன் பயப்படறே?ன்னு சொன்னாள்.. உன் பொறந்த நாளைக்கு என்ன வேணும்னு நான் கேட்டேன்.. பூட்ஸ் மட்டும் வாங்கிக் குடு-ன்னு கேட்டாள்.. சரிம்மா, நீ நல்லாயிட்டு வந்துடுன்னு சொன்னேன்.. அதுக்கப்பறம்தான் ஆபரேஷன் நடந்துருக்கு.. பாப்பாவுக்கு ஒன்னுமில்லை, மைக்ராஸ்கோப்புன்னு ஒன்னு வந்திருக்கு, அதில் லைட்டா ஹோல் போடணும்னு சொன்னாங்க.. அந்த ஹோல் அதுக்கப்பறமா, அதுவாகவே மூடிக்கும்ன்னு சொன்னாங்க.. ஒரு மணி நேரத்தில் ஆபரேஷனும் முடிஞ்சிடும்னு சொன்னதால் நம்பிக்கையா இருந்தோம்..

சர்ஜரி
ஆனால், 4 மணி நேரம் கழித்துதான் கூட்டிட்டு வந்தாங்க.. கால்ல ரத்த ஓட்டமே வரல.. ராத்திரிதான் ஆம்புலன்ஸில் ஜிஹெச்சுக்கு அனுப்பி வெச்சிட்டாங்க.. கடைசியில் ஜிஎச் வந்து பார்த்தால், கால் முழுக்க அழுகிட்டு இருக்கு.. அப்பதான் சர்ஜரின்னு சொன்னாங்க.. கால் போனால் பரவாயில்லை, உயிராவது கிடைக்கட்டும் என்று நினைத்தோம்.. ஐசியூவில் கூட பார்க்க முடியல" என்று தேம்பி தேம்பி அழுதார்.. இதனிடையே, பிரியாவின் சடலத்தை பார்த்து மாணவிகள் கதறி அழுதது காண்போரை உருக்கிவிட்டது.. "பிரியா நாங்க அழுறது உனக்கு கேக்கலயா" என்று கதறி கதறி கேட்டனர்.

ஓட்டை
எனினும், இதுபோன்று ஹோல்ஸ் போடுவதும், அடுத்தக்கட்ட சிகிச்சை முயற்சி என்று சொல்கிறார்கள்.. அதேசமயம், தசை பிடிப்பு என்பது உயிருக்கு ஆபத்தான நோய் கிடையாது என்றும், தசைகள் சிதைந்த இடத்தில் இறுக்கமாக கட்டு போட்டிருந்தால், அந்த நேரத்தில்தான், அந்த தசைகள் இன்னும் அதிகமாக சிதைய வாய்ப்புள்ளது என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.. எனினும், பிரியாவுக்கு எந்த ஒரு சிகிச்சை முயற்சியும் எடுக்க முடியாத அளவுக்கு, அவரது நிலைமை ஆபத்தான சென்றுவிட்டதாலேயே எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது என்று கவலையும், வருத்தமும் தெரிவிக்கிறார்கள்.
-
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
Election Exclusive: ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல..அம்பத்தூரில் அய்யாவுக்கு ஆப்பு! மது குடிப்போர் கையில் சிலிண்டர் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு!












Click it and Unblock the Notifications