பிஜேபிக்கு காங்கிரஸ் போட்ட ஸ்கிரீனிங்' ஸ்கெட்ச் இதுதான்.. அசாமில் பிரியங்கா.. கேரளாவில் ராகுல்.. பலே
சென்னை: இந்திய அரசியலில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரின் செயல்பாடுகளும் தற்போது பெரும் உற்றுநோக்கலுக்கு உள்ளாகியுள்ளன.. குறிப்பாக அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி ஒரு புதிய மற்றும் விவேகமான வியூகத்தை வகுத்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!
அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் பரபரப்புகள் காணப்படுகின்றன.. இதில் காங்கிரஸ் சற்று விறுவிறுப்பாகவே களமிறங்கி உள்ளது..

பாஜக விமர்சிப்பது போல ராகுல் அணி அல்லது பிரியங்கா அணி என்று கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இருவரும் ஒருமித்த கருத்துடன் வெவ்வேறு மாநிலங்களின் பொறுப்புகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.. இந்தத் தேர்தல்களில் அவர்கள் கையாளும் நடைமுறை மிகவும் வித்தியாசமானதாகவும், அதே சமயம் அந்தந்த மாநில அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்டும் இருக்கிறது..
பலே ஸ்கிரீனிங் குழு
அசாம் மாநிலத்தை பொறுத்தவரை, அங்கு ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள காங்கிரஸ், பிரியங்கா காந்தி தலைமையில் ஒரு வலுவான ஸ்கிரீனிங் குழுவை அமைத்துள்ளது..
அதாவது வேட்பாளர் தேர்வில் தொடங்கி தேர்தல் பிரச்சாரத் திட்டங்கள் வரை அனைத்தையும் பிரியங்கா காந்தி தனது நேரடி பார்வையில் கொண்டு வந்துள்ளார்.. அவருக்கு துணையாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் போன்ற தேர்தல் வியூகங்களில் கைதேர்ந்த தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்..
பாஜகவின் செல்வாக்கை முறியடிக்கவும், உட்கட்சி சவால்களை சமாளிக்கவும் பிரியங்கா காந்தி எடுத்து வரும் அதிரடி முடிவுகள் அசாம் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..
மறுபுறம், கேரளா மாநிலத் தேர்தல் ராகுல் காந்தியின் நேரடி மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.. ராகுல் காந்தியுடன் மிக நெருக்கமாக செயல்படும் கே.சி. வேணுகோபால் இந்த அணியை வழிநடத்துகிறார்..
தமிழ்நாடு, கேரளா
இங்கு சச்சின் பைலட், சசி தரூர், கன்கயா குமார் போன்ற இளைய மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தேர்தல் பார்வையாளர்களாகக் களம் இறக்கப்பட்டுள்ளனர்.. கேரளாவில் ரமேஷ் சென்னிதலா மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோருக்கு இடையே நிலவும் மெல்லிய அதிகாரப் போட்டி ஒரு சவாலாக இருந்தாலும், ராகுல் காந்தியின் செல்வாக்கு மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (UDF) பலம் ஆகியவை காங்கிரஸிற்கு அங்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளன..
நம்ம தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.. தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாகச் சில கருத்து வேறுபாடுகள் எழுந்தாலும், ராகுல் மற்றும் பிரியங்காவின் நேரடித் தலையீட்டின் மூலம் சுமூகமான தீர்வு காண முற்படுகின்றனர்..
மேற்கு வங்கம் - அக்னிப் பரீட்சை
மேற்கு வங்கத்திலும் தேர்தல் சவால்களை சந்திக்க காங்கிரஸ் தலைமை பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது.. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இந்திய அரசியலின் இந்த முக்கியமான தருணத்தில் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஒருவருக்கொருவர் துணையாக நின்று வெவ்வேறு முனைகளில் களமிறங்கியுள்ளனர்..
இந்த தேர்தல் முடிவுகள் அவர்களின் அரசியல் முதிர்ச்சிக்கும், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்கும் ஒரு மிக முக்கியமான அக்னிப் பரீட்சையாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications