அரசு பஸ்சில் புக்கிங் பண்ணி போனீங்களா? 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு.. உங்க பேர் இருக்கா பாருங்க
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக, அரசு பஸ்களில் வார நாட்களில் முன்பதிவு செய்யும் பயணிகள் 13 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, இதில் 3 பேருக்கு தலா 10 ஆயிரமும், 10 பேருக்கு தலா ரூ. 2 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் புக் செய்து பயணித்த பயணிகளில் தேர்வு செய்யப்பட்ட 13 பேரின் லிஸ்ட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் உங்களுடைய பெயர் இருக்கிறதா என்று பாருங்கள்.
தமிழகத்தில் தொலை தூர பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர் கோவில், திருச்செந்தூர், திண்டுக்கல் என பல்வேறு நகரங்களுக்கும் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு விரைவு பேருந்துகளில் பயணிகளை ஈர்க்கும் விதமாக தனியார் ஆம்னி பஸ்களுக்கு நிகரான சொகுசு வசதிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஸ்லீப்பர் மற்றும் ஏசி வசதி கொண்ட பேருந்துகளும் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் அரசு பஸ்களில் புக்கிங் செய்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. அந்த வகையில், வார நாட்களில் முன்பதிவு செய்யும் பயணிகள் 13 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து 3 பேருக்கு 10 ஆயிரமும், 10 பேருக்கு ரூ.2 ஆயிரமும் பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் அக்டோபர்-2024 மாதத்திற்கு 13 பயணிகளை இன்று, தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.@pkanamarla, இ.ஆ.ப., அவர்கள், கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்தார்கள். அதில் முதல் 3 பயணிகளுக்கு தலா ரூ.10,000/-மும், இதர 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000/-மும் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம்:-
தேர்ந்தெடுக்கப்பட்ட பயணியின் பெயர் - பயணச்சீட்டு (PNR) எண்
* உமா மகேஷ்வரி - T60481762
* ஸ்ரீசுதீஷ்னா ராம் டி - U60235013
* சேதுராமன் - Y60003149 ஆகிய 3 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
* சிந்தனையாளன் - B59729614
* தினேஷ் குமார் - L59414394
* விஜயகுமார் - L60357886
* கணேஷ் - 59965314
* வருண்குமார் எம் - N60203826
* ஏ. சேக் அப்துல்லா - R60263704
* பிரபு - T58172398
* ஜெபரின் ஜெ - T58902802
* ஸ்வேதா - T60182465
* ராதாகிருஷ்ணன் பி - Y60065367 ஆகிய 10 பேருக்கும் தலா ரூ.2,000 விரைவில் வழங்கப்படும்.
இந்நிகழ்வின் போது, மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநர்(மு.கூ.பொ) டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு. R. மோகன் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications