புயல், கனமழை! மக்கள் எதையெல்லாம் செய்யக்கூடாது.. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அட்வைஸ்
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக வட தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல், கனமழை நேரத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க, பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.
வங்கக் கடலில் வலுப்பெறும் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார நிலையில், வைத்துள்ளது.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். இதனிடையே, கனமழையின் போது மக்கள் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
வெளியில் செல்ல வேண்டாம்: இந்திய வானிலை ஆய்வு மையம், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் அறிவிப்புகளை மட்டும் நம்பி பின்பற்றலாம். பேட்டரிகளை முறை யாக பராமரிப்பது, ரேடியோ. டி.வி.க்களை தொடர்ந்து கவனிப்பது, பதற்றத்தை தவிர்த்து அமைதி காப்பது. சூறைக்காற்றினால் ஜன்னல், கதவுகள் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவற்றை மூடி வைக்க வேண்டும்.
சில நாட்களுக்கு தேவையான உணவு பொருட்கள், குடிநீர், மருந்துகள் ஆகியவற்றை கையிருப்பு வைத்து கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக முகாம்களுக்கு செல்ல வேண்டும். புயல் கரையை கடக்கும்போது வாகனத்தில் பயணிக்க கூடாது. வானிலை மையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்ல வேண்டாம்.
காய்ச்சிய குடிநீரை: மரங்கள், மின்கம்பங்கள், மின் கம்பிகளுக்கு அருகில் நிற்கவோ கூடாது. ஈரமாக இருந்தால் மின்சாதனங்களை உபயோகிக்க கூடாது. பழுதடைந்த கட்டிடங்களுக்கு உள்ளே செல்ல வேண்டாம். கயிறு. மெழுகுவர்த்தி, டார்ச்லைட், தீப்பெட்டி, கத்தி, உலர்ந்த உணவு வகைகள், குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.
நன்கு காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும். சுத்தமான உணவை உட்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பதுடன், கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும். மழைக்காலங்களில் அவசியம் இன்றி வெளியில் நடமாடக்கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications