தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. சாதித்த ஜிகேஎம் தமிழ்க்குமரன்.. ஆர்த்தி ரவியின் அம்மாவும் வெற்றி!
சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் ஜிகேஎம் தமிழ்க்குமரன் 788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதுவரை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றவர் என்ற பெருமையையும் தமிழ்க்குமரன் பெற்றுள்ளார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய பொறுப்பாளர்களின் பதவி காலம் வருகின்ற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அதன்படி 2026 - 2029 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல், சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் இன்று நடைபெற்றது.

ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து இன்று தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 1 இணைச் செயலாளர், 26 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 33 பதவிகளுக்கு 100 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த முறை இராம நாராயணன் அணி மற்றும் நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. இதில் நலம் காக்கும் அணி சார்பாக தயாரிப்பாளர் ஜிகேஎம் தமிழ்க்குமரன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். 6 மணிக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஜிகேஎம் தமிழ்க்குமரன் 788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் பாமக கெளரவ தலைவர் ஜிகே மணியின் மகன்.
அதேபோல் பாமக இளைஞரணி செயலாளராகவும் இருந்திருக்கிறார். ஆனால் அன்புமணியுடன் மோதல் ஏற்பட்டதால், பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின் லைகா நிறுவனத்தில் முதன்மை பொறுப்பில் இருக்கிறார். இதுவரை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றவர் என்ற பெருமையையும் தமிழ்க்குமரன் பெற்றுள்ளார்.
அதேபோல் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் ரவி மோகனின் முன்னாள் மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகளை பெற்று வென்றார். இதையடுத்து பலரும் இவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications