2022-23 முதல் அரையாண்டுக்கான தொழில் வரி..யாருக்கு எவ்வளவு? - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022-23 நிதியாண்டிற்குண்டான முதலாம் அரையாண்டுக்கான தொழில் வரியினை செலுத்துமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் தொழில் வரியினை பிடித்தம் செய்து, செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அதற்குண்டான விவரங்களுடன் தாக்கல் செய்து தொழில் வரியினை உரிய வழிமுறைகளில் செலுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Profession tax for the first half of 2022-23 Notification of Chennai Corporation

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில பிற அரசுத்துறை சார்ந்த அலுவலர், பணியாளர், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தொழில் புரிவோர், வணிகர்கள் ஆகியோர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தொழில் வரியினை செலுத்த வேண்டும்.

அரையாண்டுக்கான வருமானம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் திருத்தியமைக்கப்பட்ட அரையாண்டு தொழில்வரியை பொறுத்தவரையில் ரூ. 21,001 முதல் ரூ.30,000 வரை வருமானம் பெறுவோர் ரூ.135 செலுத்த வேண்டும்.

பெட்ரோல், டீசல் இன்றைக்கு என்ன விலை? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?
தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919ன்படி துணை விதி 138சி-ன் படியும் 138 டி-ன் படியும் தங்களிடம் பணிபுரிபவர்களின் சம்பளத்தில் ஆகஸ்ட் மாதம் தொழில் வரியினை பிடித்தம் செய்து, செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அதற்குண்டான விவரங்களுடன் தாக்கல் செய்து தொழில் வரியினை உரிய வழிமுறைகளில் செலுத்திட வேண்டும். இல்லையென்றால் சென்னை மாநகர முனிசிபல் சட்ட விதி 1919, துணை விதி 138-தி ன்படி அபராதம்/ வட்டி தொகை கணக்கீடு செய்து வசூலிக்கப்படும்.

2022-23ம் நிதியாண்டிற்கு உண்டான முதல் அரையாண்டு தொழில் வரியினை தவறாமல் செலுத்த வேண்டும். ரூ.21,000 வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவை இல்லை. 30,001 - 45,000 வருமானம் உள்ளவர்கள் ரூ 315, ரூ 45,001 - 60,000 வருமானம் உள்ளவர்கள் ரூ 690,ரூ 60,001 - 75,000 வருமானம் உள்ளவர்கள் ரூ 1025 வரியாக செலுத்த வேண்டும்.ரூ 75,001 மற்றும் அதற்குமேல் ரூ. 1,250 தொழில் வரியாக செலுத்த வேண்டும்.

மேலும் சென்னை மாநகராட்சிக்கு தொழில் வரியை செலுத்தும் முறைகளைப் பொறுத்தவரையில் வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி அலுவலர்களின் பெயரில் காசோலைகள், அல்லது வரைவோலைகள், கடன் பற்று அட்டை மூலமாக பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம், ஆய்வாளர்களிடம் செலுத்தி, செலுத்தப்பட்டதற்கான வரிசீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சி கனரா வங்கி கணக்கு எண். 0976201003413, பார்க் டவுன் கிளையில், IFSC Code No CNRBooode76 MICR Code of the Branch 600015030 என்ற வங்கி கணக்கின் மூலம் ECS / NEFT / RTGS வகைகளில் தொழில் வரியினை செலுத்தி, அதற்குண்டான விவரத்தினை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி அதற்குண்டான வரி ரசீதினை மின்னஞ்சல் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் வலைதளம் (www.chennaicorporation.gov.in) மூலமாக, எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமல் (Nil Transaction fee) தொழில்வரியினை செலுத்தலாம். வரி செலுத்த தவறும் பட்சத்தில் சென்னை மாநகர முனிசிபல் சட்ட விதி 1979 துணை விதி 138Fஇன் படி அபராதம் வட்டித்தொகை கணக்கீடு செய்து வசூலிக்கப்படும்.

பெருகர சென்னை மாநகராட்சியின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெரு விளக்குகள், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்திட வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+