37 + 1 + 1.. தமிழகத்தில் திமுக கூட்டணி ‛டாப்’.. அப்போ அதிமுக + பாஜக? வெளியான ராஜநாயகம் டீம் சர்வே
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி தான் அதிக இடங்களில் வெல்லும். அதேவேளையில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக, பாஜக அக்கவுண்ட் திறக்க வாய்ப்புள்ளது. சீமானின் நாம் தமிழர் கணிசமாக ஓட்டு பிடித்தாலம் வெற்றி வாய்ப்பில்லை என ராஜாநாயகம் டீம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் தான் பல்வேறு அமைப்புகள், செய்தி நிறுவனங்கள் லோக்சபா தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் ஆய்வு அமைப்பின் இயக்குனர் ராஜநாயகம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
ராஜநாயகம் டீம் சார்பில் ஒவ்வொரு சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் சமயங்களில் மக்களை சந்தித்து கருத்து கணிப்பு நடத்தி ரிசல்ட்டை வெளியிடுவது வழக்கமான பணியாகும். அந்த வகையில் வரும் லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி மக்கள் ஆய்வு அமைப்பின் இயக்குனர் ராஜநாயகம் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கினார்.
இந்த கருத்துக்கணிப்பு கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் கடந்த 1-ந்தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 4 ஆயிரத்து 485 வாக்காளர்களிடம் நேரடி சந்திப்பு மூலம் பெறப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தேனி தவிர தமிழகத்தில் 38 தொகுதிகளில் வென்றது. இந்நிலையில் தான் வரும் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது ஒரு தொகுதி குறைந்து 38 இடங்களில் திமுக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக, பாஜக கட்சிகள் வென்று அக்கவுண்ட்டை திறக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை தேனி தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் வென்றார். தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஓ பன்னீர் செல்வமும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையிலும் கூட மீண்டும் அதிமுக இந்த தேர்தலில் ஒரு இடத்தில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 2019 தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. 2014ல் கன்னியாகுமரியில் வென்று எம்பியான பொன் ராதாகிருஷ்ணன் கூட கடந்த முறை தோற்றார். இருப்பினும் வரும் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் வெல்லும் என ராஜநாயகம் டீம் நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூடுதல் இடங்களை கைப்பற்ற அதிமுக, பாஜக முயன்று வரும் நிலையில் ராஜநாயகம் டீம் கருத்து கணிப்பு அந்த கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது என கணிக்கப்பட்டுள்ளது. இது நாம் தமிழர் கட்சியினருக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. மேலும் லோக்சபா தேர்தல் தொடக்க பிரசாரத்தின் அடிப்படையில் பார்த்தால் திமுக கூட்டணிக்கு 41.3 சதவீதம் பேரும், அதிமுக கூட்டணிக்கு 24.2 சதவீதம் பேரும், பாஜக கூட்டணிக்கு 17.1 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சி 12.8 சதவீதம் பேரும், பிற கட்சிகளுக்கு 2.4 சதவீதம் பேரும், நோட்டாவுக்கு 2.2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என ராஜநாயகம் டீம் தெரிவித்துள்ளது.
-
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications