மத்திய அரசுக்கே 200 கோடி அல்வா.. சென்னையில் பிரபல ‘ரியல் எஸ்டேட்’ அதிபர் கைது.. அமலாக்கத்துறை அதிரடி
சென்னை: காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததது. அப்போது அரசு நிலங்கள் முறைகேடான ஆவணங்கள் மூலம் தனியார் நிலங்களாக காட்டப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் ரூ.200 கோடி மோசடி நடந்தது. இந்த வழக்கில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் உள்ளன. காஞ்சிபுரம் மாநகரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற ஊர்கள் பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், அந்தப் பகுதியில் நிலம் எடுப்பு பணியில் ஈடுபட்டது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், சாலையோரம் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தி, அதன் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத்தொகையும் வழங்கியது.
இந்த இழப்பீடுகளை பெறுவதற்காக சிலர் போலியான நில ஆவணங்களையும், பட்டாக்களையும் தயாரித்து வழங்கி, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் ரூ.200 கோடி வரை முறைகேடாக பெற்றதாக புகார்கள் பறந்தது இதில் பீமன்தாங்கல் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை தங்களுக்கு சொந்தமானது என சிலர் பட்டா பெற்று, அதை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் வழங்கி பல கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார்கள்.
இவ்வாறு பல்வேறு வகைகளில் அரசு நிலங்கள் முறைகேடான ஆவணங்கள் மூலம் தனியார் நிலங்களாக காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் ரூ.200 கோடி மோசடி செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்த முறைகேட்டுக்கு காஞ்சீபுரத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் அப்போது கூறப்பட்டது.
இந்த முறைகேடு புகார் தொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் உள்பட 11 பேர் மீது காஞ்சீபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். இந்த முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாகவும் புகார் எழுந்தது. அதனடிப்படையில் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தினார்கள.
அமலாக்கத்துறை சார்பில் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு அடிப்படையில், அமலாக்கத்துறையினர், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வழக்கில் தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 15 இடங்களில் கடந்த நவம்பர் 19-ந்தேதி சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.56 கோடி பணம், ரூ.74 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் பறிமுதல் செய்தது. மேலும் பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்த ரூ.8.4 கோடி பணம் மற்றும் பங்கு பத்திரங்கள் ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கி உத்தரவிட்டது,
இந்த வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை அசோக்நகரில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநர் ஆஷிஷ் ஜெயினிடம் (வயது 46) விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில் அவரை கைது செய்தனர்.
ஏற்கனவே இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை செய்து வந்த காஞ்சீபுரம் மாவட்ட போலீசாரும் ஆஷிஷ் ஜெயினை கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னையை சேர்ந்த மேலும் சில தொழிலதிபர்களை பிடித்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 19-ந்தேதி அன்று அமலாக்கத்துறை சென்னையில் பல முக்கிய தொழில் அதிபர்களின் வீடுகளில் சோதனை நடத்தியிருக்கிறது. எனவே மேலும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications