வணிகவரித்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை: வணிகவரித்துறை பணியாளர்களுக்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் வணிகவரித்துறை பணியாளர்களுக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும். அதனடிப்படையில் 1981-ம் ஆண்டு முதல் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலை வெளியிடவேண்டும் என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

வணிக வரித்துறை பணி நியமனம்
வணிக வரித்துறையில் உதவி வணிக வரி அலுவலர், பதிவுத்துறையில் இரண்டாம் நிலை சார்பதிவாளர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு நேரடி நியமனத்தின் மூலமாகவும், இரு பங்குகள் அதே துறைகளில் உதவியாளர் நிலையில் இருப்பவர்களைக் கொண்டு மாறுதல் மூலமான நியமனம் வழியாகவும் நிரப்பப்படுகின்றன. இந்த நடைமுறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வந்தது.

நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இத்துறைகளின் மூத்த அதிகாரிகள் சிலர், உதவியாளர்கள அடுத்த நிலை பதவியில் நியமிக்கப்படுவதை பதவி உயர்வாகத்தான் பார்க்க வேண்டும். பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று கூறி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாறுதல் மூலமான நியமனங்களில் இட ஒதுக்கீடு கூடாது என தீர்ப்பளித்தது. அதன்படி, 2000-ஆவது ஆண்டு முதல் மாறுதல் மூலமான நியமனங்களில் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு ரத்து செய்தது.

தமிழக அரசு மேல்முறையீடு
அதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என அறிவித்ததுடன், மாறுதல் மூலமான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 2018-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி தீர்ப்பளித்திருந்தது. அதை எதிர்த்து அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தி, வணிகத்துறை பணியாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்த வணிகவரித்துறை நிர்வாகம், உச்சநீதிமன்றத் தீர்ப்பு கண்டிப்பதாக செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது.

பணிமூப்பு பட்டியல்
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பான இன்னொரு வழக்கில், கடந்த 29.11. 2021 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், 1981 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான பணிமூப்பு பட்டியலை இரு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். அதன் பிறகே பதவி உயத்வு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி 10 மாதங்கள் ஆகியும் இதுவரை பணிமூப்பு பட்டியலை வணிகவரித்துறை நிர்வாகம் வெளியிடாமல் தாமதிக்கிறது.

அதிகாரிகளுக்கு பணிச்சுமை
வணிகவரித்துறை பணியாளர்கள் அவர்களின் சட்டப்பூர்வ உரிமையைத்தான் கோருகிறார்கள். அவர்களுக்கு நியாயப்படியும், சட்டப்படியும் வழங்கவேண்டிய மாறுதல் அடிப்படையிலான நியமனம் என்ற பதவி உயர்வு, கடந்த 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் பதவி உயர்வு கிடைக்காமலேயே நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். மற்றொருபுறம் நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாததால், நூற்றுக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அதனால் வணிகவரித்துறை அதிகாரிகளின் பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

தாமதிக்கப்படும் நீதி
தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முக்கியமான துறை வணிக வரித்துறை ஆகும். அத்துறையின் பணியாளர்களுக்கு உரிய பதவி உயர்வும், சமூக நீதியும் வழங்கப்படாததால், அத்துறையில் பணிச்சுமை அதிகரித்து, பணிகள் முடங்குவது, வணிகவரி வசூல் உள்ளிட்ட பல விஷயங்களை பாதிக்கும். அதுமட்டுமின்றி, 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்குப் பிறகும் வழங்க மறுப்பது நியாயமற்றது. தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்ற பொன்மொழிக்கு இது உதாரணம் ஆகிவிடக்கூடாது.

தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
வணிகவரித்துறை பணியாளர்களுக்கு 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் நீதியை வழங்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு. அதை நிறைவேற்றும் வகையில், 1981 முதல் 2020 வரையிலான வணிக வரித்துறை பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்; அதனடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என வணிக வரித்துறைக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிடவேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications