சொத்து பத்திரங்கள் ஆவணங்கள் ரெடி? பத்திரப்பதிவு செய்வோருக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன் தேவை: பெயிரா
சென்னை: சொத்து சம்பந்தமான ஆவணங்களை இன்றைய தினம் பதிவு செய்ய திட்டமிடும் பொதுமக்களுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன் வழங்கிட ஆவண செய்ய வேண்டும் எனறு தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு பொதுமக்கள் நலன் கருதி பெயிரா கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
2 நாட்களுக்கு முன்பு, தமிழகப் பதிவுத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.. அதில், மார்ச் மாதத்தின் 8, 15, 22 மற்றும் 29 ஆகிய 5 சனிக்கிழமைகளிலும் தமிழகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்றும், எனவே மேற்கண்ட நாட்களில் பத்திரப்பதிவு செய்து பொதுமக்கள் பயன்பெறும் விதமாகப் பதிவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்பதிவு டோக்கன்கள்
இந்நிலையில், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, இன்று சுபமுகூர்த்த தினத்தை (திங்கட்கிழமை 03.03.2025) முன்னிட்டு சொத்து சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்ய திட்டமிடும் பொதுமக்களுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன் வழங்கிட ஆவண செய்ய வேண்டும் என தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு பொதுமக்கள் நலன் கருதி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "இன்று திங்கட்கிழமை 03.03.2025 சுபமுகூர்த்த தினம் என்பதால், இந்நன்னாளில் பெரும்பாலான பொதுமக்கள் தமிழகத்தில் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வமும் - மகிழ்ச்சியும் மற்றும் மனதிருப்தியும் அடைகின்றார்கள்.
தாம்பரம், நீலாங்கரை சார் பதிவாளர் அலுவலகம்
இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் குறிப்பாக பம்மல், பல்லாவரம், திருப்போரூர், படப்பை, செங்கல்பட்டு, ஆவடி, கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, தாம்பரம், திருப்பெரும்புதூர், நீலாங்கரை உள்ளிட்ட பல அலுவலகங்களில் ஆவண பதிவு செய்ய முன்பதிவு டோக்கன் இல்லை.
இதனால் பெரும்பாலான பொதுமக்களுக்கு முன்பதிவு டோக்கன் கிடைக்க பெறாமல் ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார்கள் ஆகவே அவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் பதிவுத்துறை மதிப்பளித்து 03.03.2025 சுபமுகூர்த்த தினமான இன்று ஆவண பதிவுகளை அனைத்து மக்களும் மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் தேவையான அளவிற்கு கணிசமாக முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்க வேண்டுகிறோம்.
கூடுதல் டோக்கன்கள்
இதன் மூலம் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறும். தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் இதனை கூடுதல் கவனத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் மேற்கண்ட சுப முகூர்த்த தினத்தில் தேவையான அளவிற்கு கூடுதலாக முன்பதிவு டோக்கனை கணிசமாக உயர்த்தி வழங்கிட வழிவகை செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications