பத்திரப்பதிவு சந்தேகங்கள்.. சிறு தவறு வாழ்நாள் சேமிப்பை காலி செய்திடும்.. பொதுமக்கள் அறிய வேண்டியவை
சென்னை: பத்திரப்பதிவு செய்யப்போகிறீர்கள் என்றால், இன்று நிறைய விஷயங்களை நீங்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். ஒரு வீடு அல்லது நிலத்தை வாங்கும் போது என்னவெல்லாம் பார்க்க வேண்டும். எதை எல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். சில தவறுவகள் டபுள் டாக்குமெண்டாக மாறிவிடும். உங்கள் வாழ்நாள் உழைப்பை காலி செய்துவிடும். அதில் முதலில் அறிய வேண்டியது மூலப்பத்திரம். அதாவது அசல் ஆவணங்கள், அடுத்ததாக பட்டா இது பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
தமிழகத்தில் வீடு, நிலம் வாங்குவோரை குறிவைத்து கடந்த காலங்களில் நடந்த பல்வேறு மோசடி சம்பவங்கள் மற்றும் பத்திர பதிவு மோசடிகளை முற்றிலும் தடுக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த அடிப்படையில் பத்திரப்பதிவு துறை, ஒருவர் பத்திரப்பதிவு செய்யும் போது, அதன் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று விதியை வகுத்து அதனை பின்பற்றி வந்தது. இந்த நிலையில், இந்த விதி சட்டமாக இல்லாததால், அந்த விதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதனால் அசல் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பத்திரப்பதிவு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு, அசல் ஆவணம் கட்டாயம் என்ற பதிவுத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது. அதனை கவர்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். கடந்த 9-ந்தேதி ஜனாதிபதி முர்மு, அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து இந்த சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
அந்த அரசாணையின்படி, நீங்கள் இனி பத்திரப்பதிவின் போது அசல் ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது செயலில் உள்ள பிற எந்தச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல், சொத்துகள் தொடர்பான ஒரு ஆவணம் பதிவு செய்ய முன்வைக்கப்படும் போது பதிவு அதிகாரி, அந்தச் சொத்தில் உரிமை பெற பயன்படுத்தப்பட்ட முந்தைய மூல ஆவணத்தையும், மேலும் சமர்ப்பிக்கும் தேதிக்கு முன் 10 நாட்களுக்குள் பெறப்பட்ட அந்தச் சொத்திற்கான வில்லங்க சான்றிதழையும் கொடுக்கவில்லை என்றால், அந்த ஆவணத்தை பதிவு செய்ய மறுத்துவிடுவார்.
சொத்து குறித்த விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டு, அது நிறைவேற்றப்படாதிருந்தால், அந்த ஒப்பந்தத்தை குறிப்பிட்ட செயல்பாடுடன் நிறைவேற்ற வழக்கு தொடரும் காலக்கெடு முடிவடையாத வரை பதிவு அதிகாரி புதிய ஆவணத்தை பதிவு செய்ய முடியாது,.
அதேநேரம் அசல் ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்வதற்கான சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.. அதன் விவரம் வருமாறு;-
* குறிப்பிட்ட சொத்தில் அடமானம் இருந்தால், அடமான உரிமையாளர் வழங்கும் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பதிவு செய்யக்கூடாது.
* பூர்வீக சொத்தாக இருந்தால் முந்தைய மூல ஆவணம் இல்லை என்றால், அந்தச் சொத்திற்கான வருவாய்த் துறை வழங்கிய பட்டா வழங்கப்பட வேண்டும்.
* அசல் ஆவணம் தொலைந்து விட்டால், போலீஸ் துறை வழங்கிய 'கண்டறிய முடியாத சான்றிதழ்' மற்றும் அந்த ஆவணம் இழந்ததை அறிவிக்கும் விதமாக நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.
* அரசு ஆவணங்கள் மற்றும் மாநில அரசு அறிவிக்கும் சில வகை ஆவணங்களுக்கு முந்தைய மூல ஆவணத்தை வழங்கும் அவசியமில்லை" இவ்வாறு புதிய சட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதேநேரம் சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிவர்களின் சொத்தை இன்னொருவருக்கு விற்க முடியாது என்கிறநிலை குறித்து அதிகாரிகள் கூறுகையில், சொத்தின் அடமானம் என்பது பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட சொத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றார்கள்.
அதேநேரம் சொத்து வாங்குவோர் கவனிக்க வேண்டியவை
1.முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும். அதில் பூஜிய மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்க வேண்டாம்.
2.Double Document நிலம்.
Power of attorney(POA) double document
அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட்க்கு இட்டு செல்லும்.
POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள் POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள்.
அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட்.
3.உயில் பத்திர நில double document.
உயில் மூலம் உரிமை மாறி இருக்கா
உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.
எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாக பார்க்க வேண்டும் பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம்.
பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கான்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும் இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட்.
4.செட்டில்மெண்ட் பத்திர நிலம் double document .
செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும் 1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.
செட்டில்மெண்ட் பத்திரத்தை சிவில் கோர்ட் மூலமாக தான் ரத்து பண்ண முடியும் பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.
EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications