உங்கள் சொத்தை யாராவது ஏமாற்றி போலி பத்திரம் தயார் செய்திருந்தால் என்ன செய்யலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்து தொடர்பான மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் உங்கள் சொத்தை ஏமாற்றி (Fraud) போலி பத்திரம் போட்டிருந்தால் என்ன செய்வது? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து இன்றைய தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உரிமையில்லாத நபர் மூலம், போலி ஆவணங்கள் பயன்படுத்தி, அல்லது உண்மையை மறைத்து சொத்து பத்திரம் பதிவு செய்யப்படும் சம்பவங்கள் பல நேரங்களில் நடைபெறுகின்றன.

Property Fraud

இவ்வாறு Fraud மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரம் சட்டப்படி செல்லாது என்பதே அடிப்படை உண்மை.

Fraud மூலம் பத்திரம் பதிவு செய்யப்பட்டிருப்பது உங்களுக்கு தெரிய வந்த நாளிலிருந்து தான் சட்ட காலவரம்பு (Limitation) தொடங்குகிறது.

பத்திரம் பதிவு செய்யப்பட்ட தேதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இந்த அம்சத்தை அறியாமையால் பலர் தங்கள் உரிமையை இழக்கின்றனர்.

சிவில் வழக்கு

Fraud தெரிய வந்த நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் Civil Court-ல் வழக்கு தொடர வேண்டும்.

இந்த வழக்கின் மூலம், போலி பத்திரத்தை ரத்து செய்வதற்கும், சொத்து உரிமையை மீட்பதற்கும் சட்ட வாய்ப்பு உள்ளது.

சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், குறிப்பாக சொத்து கைப்பற்றல் மற்றும் உரிமைத் தகராறுகளில், 12 ஆண்டுகள் வரை சொத்து மீட்பு வழக்கு செல்லும் வாய்ப்பும் சட்டத்தில் உள்ளது.

குற்றவியல் வழக்கு

Fraud, Forgery, போலி ஆவணம் உருவாக்கல் போன்ற குற்றங்களுக்கு எந்த Limitation காலவரம்பும் இல்லை.

அதனால், எத்தனை ஆண்டுகள் கடந்திருந்தாலும், எந்த நேரத்திலும் FIR பதிவு செய்யலாம்.

"காலம் கடந்துவிட்டது" என்பதைக் காரணமாகக் கொண்டு காவல் நிலையம் புகாரை நிராகரிக்க முடியாது.

முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது Fraud நடந்த நாள் முக்கியமல்ல; Fraud உங்களுக்கு தெரிய வந்த நாளே சட்டக் கணக்கின் தொடக்கம்.
இதுவே Civil வழக்கும் Criminal வழக்கும் தீர்மானிக்கப்படும் முக்கிய விதி.

பொதுமக்களுக்கு ஒரு சட்ட அறிவுரை Fraud சந்தேகம் ஏற்பட்டவுடன் தாமதிக்காமல் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். Civil வழக்கும் Criminal புகாரும் ஒரே நேரத்தில் தொடர்வது உங்கள் உரிமையை பாதுகாக்க வலுவான வழியாகும்.
சட்ட அறிவு தான் மோசடிகளுக்கு எதிரான முதல் பாதுகாப்பு.
உங்கள் சொத்து - உங்கள் உரிமை. உரிமையை அறிந்தால், ஏமாற்றம் நிலைக்காது. இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+