"பவர்" பத்திரப்பதிவு கட்டணம்.. பொது அதிகார ஆவண பதிவு கட்டணத்தில் மாற்றம்? தமிழக அரசு எடுக்கும் முடிவு
சென்னை: தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பத்திரப்பதிவு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் பொதுமக்களிடம் பரவலாக எழ ஆரம்பித்துள்ளன.
தமிழ்நாட்டில் பல காலமாகப் பதிவுத்துறைக்கான கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருந்த நிலையில், கடந்த 10ம் தேதி தான் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
ரசீது கட்டணம்: குறிப்பாக, ரசீது ஆவணத்திற்குப் பதிவு கட்டணம் ரூ.20/-லிருந்து ரூ.200/- எனவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000/-லிருந்து ரூ.10,000/- எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25,000/-லிருந்து ரூ.40,000/- எனவும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர, தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200/-லிருந்து ரூ.1,000/- எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்குப் பதிவுக்கட்டணம் ரூ.10,000/- என்று உள்ளதைச் சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் என்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு: இந்த கட்டண உயர்வு, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது... இந்த கட்டண உயர்வால், புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ஒருவித தயக்கம் ஏற்படும் என்றும், அதிலும், செட்டில்மென்ட் பத்திரத்தை பதிவு செய்ய, 10,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்பது, வெகுஜன மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், செட்டில்மென்ட் பத்திரத்துக்கான கட்டண உயர்வை பழைய நிலைக்கே அரசு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், கட்டுமான ஒப்பந்த பதிவுக்கு, ஏற்கனவே 1 சதவீதம் கட்டணம் இருந்த நிலையில், இப்போது 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது... இதே போன்று, பொது அதிகார பதிவுக்கு 1 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவைகளுடன் பிற கட்டணங்களையும் சேர்த்தால், சொத்தின் மதிப்பில், 4 சதவீதத்தை கூடுதலாக செலவிட வேண்டி வருகிறது..
தவிரவும், நிலத்துக்கு மட்டுமே வழிகாட்டி மதிப்பு இருக்கும் நிலையில், கட்டடத்துக்கான மதிப்பை எப்படி கணக்கிடுவது என்பதில் குழப்பமும் ஏற்பட்டுள்ளதால், இந்த கட்டண உயர்வை, திரும்ப பெற அரசை வலியுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வெடித்து கிளம்பி உள்ளன.
பிஏஐ மனு: இப்படிப்பட்ட சூழலில், பொது அதிகார ஆவண பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பிஏஐ எனப்படும் இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மையமும் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு ஒன்றையும் அனுப்பியிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோருக்கு இந்த சங்கத்தின் தலைவர் ஏஎன் பாலாஜி அந்த மனுவை அனுப்பியிருக்கிறார். அதில் உள்ளதாவது:
1000 ரூபாய் கட்டணம்: குடும்ப உறுப்பினர் அல்லாத நபர்களுக்கு வழங்கப்படும் பொது அதிகார ஆவணத்தை பதிவு செய்ய இதுவரை 1000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இது ஜூலை 10 முதல் சொத்தின் மதிப்பில் 1 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளது. 6 மாதம் முதல் ஒரு வருடத்துக்கு மட்டுமே பொது அதிகார ஆவணம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு சொத்தின் மதிப்பில் ஒரு சதவீதத்தை கட்டணமாக வசூலிப்பதால் வீடு விற்பனையில் தொய்வு ஏற்படும்.
பெருகும் எதிர்பார்ப்பு: இப்போதுள்ள செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் எதிர்கால திட்டங்களை கருத்தில் வைத்து அந்த அந்த கட்டணத்தை குறைக்க வேண்டும். இதே போன்று கட்டுமான ஒப்பந்த பதிவு கட்டணத்தையும் குறைக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். நாளுக்கு நாள் பத்திரபதிவு கட்டண உயர்வுக்கு அதிருப்திகள் வெடித்து வருவதால், அரசு இதை மறுபரிசீலனை செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications