போலி பத்திரம்.. சொத்து விற்பனையில் இன்று முதல் புதிய நடைமுறை..தமிழக பத்திரப்பதிவு துறை போட்ட அதிரடி
சென்னை: தமிழக மக்களின் நன்மைக்காக பல்வேறு அதிரடிகளை பதிவுத்துறை கையில் எடுத்து வருகிறது.. அந்த வகையில் வெளியிட்டிருந்த முக்கிய உத்தரவானது, இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
சொத்துக்கள் விற்பனையில், நிறைய மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. குறிப்பாக, போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் அதிகரித்துவிட்டன.

ஆள் மாறாட்டம்: இதுபோல, ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடந்தால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடி வந்தனர்.. அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்தது.
இந்த நடைமுறையை தமிழக அரசு மாற்றியிருந்தது.. அதன்படி, இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.. எனினும் தொடர்ந்து போலி பத்திரங்கள் மூலம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.. இதற்கும் தமிழக அரசு கடிவாளத்தை போட்டு வருகிறது.
தணிக்கை: அதேபோல, சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும்போது, கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்வுகளை போட்டோக்களாக பத்திரத்தில் இணைப்பது நடைமுறையில் இருந்து வருகிறது.. இந்நிலையில், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாகவே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
அதாவது, சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும் என்றும், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவானது இன்று முதல் அதாவது அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய நடைமுறை: இந்த புதிய நடைமுறையானது, அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும் என்றும், கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவுத்துறை தலைவரால் தனியே வழங்கப்படும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்ததால், இதற்கான எதிர்பார்ப்பு எகிறிவருகிறது.
காலிமனை என பதிவுக்கு வரும் ஆவணங்களில் அந்த இடத்தை எளிதில் அறியும்வண்ணம் ஜியோ- கோஆர்டினேட்ஸ்ஸுடன் (Geo Coordinates) சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோவை, ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைத்து, இதனை அனைத்து ஆவணதாரர்களும் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பலன்கள்: இந்த புதியநடைமுறையால் என்னென்ன பலன்கள் கிடைக்க போகிறது தெரியுமா? இதனால், பதிவுத்துறையில் போலி ஆவணங்கள் பதிவு செய்யப்படுவது தடுக்கப்படும் என நம்பப்படுகிறது.. அதேபோல, கட்டிடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று பதியப்படுவதால், ஏற்படும் வருவாய் இழப்பையும் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது..
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications