Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் லாட்ஜில் ரூம் போட்டு.. கள்ளக்காதலி வாயில் வெடியை வைத்து.. ஜெலட்டின் குச்சி எப்படி? கொடுமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்துகள், வன்முறைகள் இந்தியாவில் அதிகரித்து கொண்டேயிருக்கிறது. பச்சிளம் குழந்தைகளையே, பெற்ற தாய்மார்கள் துடிதுடிக்க கொல்கிறார்கள் என்றால், தாலி கட்டிய கணவனையும் ஈவிரக்கமின்றி கொன்று விடுகிறார்கள்.. இதற்கு நடுவில் கள்ளக்காதலர்களே தங்களுக்குள் கொலைகளை செய்துவிடுகிறார்கள்.. இதனால் நாளுக்கு நாள் கள்ளக்காதல் மரணங்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஒரு பயங்கர சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹன்சூர் தாலுகாவில் உள்ளது ஹிரசனஹில் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருகிறார் 20 வயது பெண் ரக்‌ஷிதா..

Bangalore gelatin sticks Lodge

இவருக்கும் கேரளாவை சேர்ந்த இளைஞருக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது... ஆனால், திருமணத்துக்கு முன்பே, ரக்‌ஷிதாவுக்கு, சித்தராஜூ என்பவருடன் காதல் இருந்து வந்துள்ளது..

ரக்‌ஷிதாவுக்கு திருமணமாகியும் இந்த கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது.. சித்தராஜு, ரக்ஷிதாவின் உறவினர் ஆவார்.. அவரும் ரக்ஷிதாவின் கிராமத்திலேயே வசித்து வந்துள்ளார்.. அத்துடன், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

கள்ளக்காதல் - வாக்குவாதம்

இந்நிலையில், ரக்‌ஷிதாவும், சித்தராஜுவும் நேற்று ஹிர்யா கிராமத்திலுள்ள ஒரு லாட்ஜூக்கு சென்றிருக்கிறார்கள்.. அப்போது திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது வாக்குவாதமாக வெடித்துள்ளது..

அப்போது ஆத்திரமடைந்த சித்தராஜு, தான் மறைத்து கொண்டுவந்த வெடிமருந்தை ரக்‌ஷிதாவின் வாயில் அடைத்து அதை வெடிக்கச்செய்துள்ளார். இதில், ரக்‌ஷிதாவின் முகம் முழுவதுமே வெடித்து சிதறியிருக்கிறது.. சம்பவ இடத்திலேயே ரக்ஷிதா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்...

ரூமிலிருந்து வெடிச்சத்தம் கேட்கவும் அதிர்ச்சியடைந்த லாட்ஜ் ஊழியர்கள் விரைந்து சென்றனர்.. அதற்குள் கள்ளக்காதலன் சித்தராஜு அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார்.. ஆனால், அவரை விரைந்து சென்று ஊழியர்கள் பிடித்துவிட்டனர்.. பிறகு இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தந்தார்கள்...

லாட்ஜ்ஜில் ரூம் போட்ட ஜோடி

லாட்ஜூக்கு விரைந்து வந்த போலீசார், சித்தராஜுவை கைது செய்ததுடன், லாட்ஜ் ரூமில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ரக்‌ஷிதாவின் உடலை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

சித்தராஜூக்கு 26 வயதாகிறதாம்.. ரக்ஷிதாவை காதலிக்கும்போதிருந்தே, அடிக்கடி ஒன்றாக வெளியூர் சென்று வருவதை இவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்..

கள்ளக்காதல் ஜோடி

சில மாதங்களுக்கு முன்புதான் ரக்ஷிதாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.. திருமணத்துக்கு பிறகும் சித்தராஜுவுடனான உறவை இழக்க ரக்ஷிதா விரும்பவில்லை.. எனவே தொடர்ந்து இருவரும் சந்தித்து வந்ததாக தெரிகிறது.

மைசூரின் கபடியில் உள்ள சித்தப்பாஜி கோவிலுக்கு செல்லலாம் என்று சொல்லித்தான் நேற்று முன்தினம் ரக்ஷிதாவை சித்தராஜு அழைத்திருக்கிறார்.. பிறகு இருவரும், சாலிகிராமம் தாலுகாவின், பேர்யா கிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருக்கிறார்கள்.. இரவில் இவர்களுக்குள் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்று தெரியவில்லை.

நள்ளிரவில் லாட்ஜில் சத்தம்

அப்போதுதான் வெடிமருந்து, அதாவது ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகளை ரக்ஷிதாவின் வாயில் திணித்து, வெடிக்க வைத்துள்ளார் சித்தராஜு.. நள்ளிரவில் வெடி சத்தம் கேட்டு, லாட்ஜ்ஜில் தங்கியிருந்தவர்கள், ஊழியர்கள் எல்லாம் அலறி ஓடிவந்துள்ளனர்..

அப்போது ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த ரக்ஷிதாவை காட்டி, செல்போன் வெடித்து, தன்னுடைய காதலி இறந்துவிட்டதாக சித்தராஜூ சொல்லி உள்ளார்.. ஆனால், அங்கு செல்போன் பாகங்கள் எதுவுமே இல்லையாம்..

வாக்குமூலம் தந்த சித்தராஜூ

இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள், செல்போன் எங்கே என்று கேட்டிருக்கிறார்கள்.. அதற்கு சித்தராஜு இப்பதான் வெளியே வீசி எறிந்தேன் என்று சொல்லிவிட்டு தப்பிக்க முயற்சித்துள்ளார்.. உடனே அவரை மடக்கி பிடித்த லாட்ஜ் ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் தந்திருக்கிறார்கள்..

ரக்ஷிதாவை கொலை செய்ததை போலீசில் இப்போது ஒப்புக்கொண்டுள்ளார் சித்தராஜூ.. ஆனால், அவர் எதற்காக கொலை செய்தார்? இவர்களுக்குள் என்ன தகராறு நடந்தது? ஜெலட்டின் குச்சிகளை எங்கிருந்து வாங்கி வந்தார்? என்றெல்லாம் தெரியவில்லை.. எனவே, இதுகுறித்து அவரிடம் விசாரித்து கொண்டிருக்கிறார்கள் போலீசார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+