உல்லாசத்துக்கு வாடகைக்கு பெண்கள்! நம்ம சென்னையிலா? இதுக்கு விபச்சாரத்தை அரசுடைமையாக்கிடலாமே: பிரபலம்
சென்னை: வாடகைக்கு காதலிகள் கிடைப்பதாகவும், டோக்கன் செலுத்தி பிடித்தமான பெண்களை உல்லாசத்துக்கு அழைத்து கொள்ளலாம் என்றும் சென்னையில் ஒரு ஓட்டலில் வித்தியாசமான நடைமுறை வந்துள்ளது.. இதுதொடர்பான புகார் போலீசுக்கு சென்றுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இதுபோன்ற பார்கள், பப்கள் குறித்து குற்றவியல் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தன்னுடைய கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள ஒரு தனியார் பாரில் , வாடகைக்கு பெண்கள் கிடைப்பதாக பகீர் புகார் கிளம்பியிருக்கிறது. பாரில் செல்லும் ஆண்கள், ஜோடியாக உள்ளே நுழைய வேண்டும். பிறகு, நடனமாடும் பெண்களை, டோக்கன் அடிப்படையில் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அந்த பெண்களுடன், சம்பந்தப்பட்ட ஆண்கள் டான்ஸ் ஆடவிட்டு செல்லலாம். சுருக்கமாக சொல்லப்போனால், பணம் கொடுத்தால் டோக்கன் முறையில் காதலிகள் வாடகைக்கு கிடைப்பார்கள்,

வாடகைக்கு காதலிகள்
தினமும் இரவு 7.30 மணிக்கு துவங்கும் இந்த பாரில் நுழைவு கட்டணம் 1000 ரூபாய் ஆகும்.. வாடகை காதலிக்கு 200 ரூபாய்.. டோக்கன் அடிப்படையில் பணம் வசூலாகிறது. இது தொடர்பாக ஒருவர் தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார்..
வாடகைக்கு எடுக்கும் பெண்களிடம் சிலர் நள்ளிரவுக்கு மேல் அத்துமீறுவதால், பல ஏழை பெண்கள் இப்படி சிக்கியிருப்பதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தன்னுடைய புகாரில் கோரியிருக்கிறார்.
இந்நிலையில், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள குற்றவியல் வழக்கறிஞர் தமிழ் வேந்தன், "கேப்ரே நடனங்கள் சென்னையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. உதாரணத்துக்கு பப்களில் 10 பெண்கள் இருக்கிறார்கள் என்றால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உடைகளில் இருப்பார்கள்.. அங்கேயே மதுபானங்கள் விற்பனையாகும்..
பாண்டிச்சேரி கலாச்சாரம்
அங்கு செல்பவர்கள் மதுபானத்தை குடித்து கொண்டே, அங்கு நடனமாடும் பெண்கள் மீது பணத்தை வீசுவார்கள். பாருக்குள் நுழைந்ததுமே மதுபோதையில் அங்கிருந்து உடனே கிளம்பி விடக்கூடாது என்பதற்காகவும், அங்கேயே மதுப்பிரியர்கள் பணத்தை செலவழித்து பொழுதை கழிக்க வேண்டும் என்பதற்காகவும்தான் இப்படியான நடன கலாச்சாரங்கள் கொண்டுவரப்பட்டன.
முதன்முதலில் பாண்டிச்சேரியில்தான் இந்த கலாச்சாரம் அன்று அரங்கேறியது... ஆனால் அங்கே நிர்வாண நடனம் நடைபெற்றது.. இதுபோன்ற நடைமுறைகளுக்கு கடிவாளம் போட்டும்கூட தற்போது மீண்டும் சென்னையில் புகார் கிளம்பியிருக்கிறது.
இந்த புதிய நடைமுறையில் டோக்கன் கொண்டுவரப்பட்டுள்ளது.. ஓட்டலுக்கு வருபவர்கள் முன்கூட்டியே டோக்கன் வாங்கிவிட வேண்டும். பிறகு நடனமாடும் பெண்களை பிடித்திருந்தால், அவர்களை உல்லாசத்துக்கு அழைத்து செல்லலாம் என்பதுதான் இப்போது வந்துள்ள புதிய நடைமுறை.
இளம்பெண்களின் வறுமை
பெரும்பாலும் இளம்பெண்களின் வறுமையை பயன்படுத்தி, இவ்வாறு ஓட்டலில் நடனமாட வைப்பது தவறான விஷயமாகும்.. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க இதுதான் வழி என்று அந்த பெண்களும் இந்த தொழிலில் இறங்கிவிடுகிறார்கள். இதுபோன்ற ஓட்டல்களுக்கு மிகவும் வசதி படைத்தவர்களே வருவார்கள்.. தண்ணீராய் பணத்தை செலவழிப்பார்கள்.
கோயில் திருவிழாவில் வறுமைக்கு ஆட வருபவர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஏழை எளிய விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, ஆடி மாசம் நடக்கும் திருவிழா மட்டும்தான் ஒரே பொழுதுபோக்கு.. பிறகு 8 நாள் என்று விழாவை குறைத்தார்கள்.. பிறகு 1 நாள் என்று குறைத்தார்கள்.. இப்போது அந்த 1 நாள்கூட கோவில் திருவிழாவுக்கு டான்ஸ் ஆடக்கூடாது என்கிறார்கள்.. இதனால் கலாச்சாரம் கெட்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள்..
கலாச்சாரம் - நடனம்
இதுவே டிவி, செல்போன், யூடியூப்களில் எந்நேரமும் ஆடுகிறார்களே, அப்போதெல்லாம் இவர்களது கலாச்சாரம் கெட்டுப்போகவில்லையா? நடனம் ஆடுவதிலேயே எத்தனை முரண்பாடுகள்?
எனக்கு தெரிந்தே, சென்னை மாநகராட்சி எல்லைகளுக்குள் 25 பப்கள் உள்ளன.. எனக்கு தெரியாமல் நிறைய இருக்கலாம்..
மது, மாது, சூது என அனைத்துமே கலந்த இடம்தான் இவை.. இதுபோன்று பப்களை நடத்த, கட்டிடங்களை வாடகைக்கு ஏன் விடுகிறார்கள்? அவர்கள் மீதுதான் தவறு சொல்ல வேண்டும். இதெல்லாம் முறைப்படுத்த வேண்டும்..
எய்ட்ஸ் பாதிப்பு
டாஸ்மாக்குகளை அரசுடைமையாக்கப்பட்டதுபோல், பப்களையும், விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமாக்கலாமே? இதனால், பாலியல் பலாத்கார சம்பவங்கள் முற்றிலும் குறையாது, ஆனால், மட்டுப்படுத்தப்படும். கலாச்சார கட்டமைப்பு என்று சொல்லி கொண்டிருக்கிறோமே தவிர, எய்ட்ஸ் பாதிப்பில் 2வது இடத்தில் நாம்தான் உள்ளோம்.
சென்னை தி.நகரில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அனுமதி பெற்றுள்ளார்கள். மனமகிழ் மன்றம் என்பது உறுப்பினர்கள் அடங்கியது.. உறுப்பினர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி தரப்படும்.
இங்கு கேரம்போர்டு, செஸ்போர்டு, நீச்சல் குளம், பில்லியர்ஸ் போன்றவை விளையாடுவதற்காக பணக்காரர்கள் கூடும் இடமாகும். சீட்டு விளையாடலாம், ஆனால் பணம் வைத்து எந்த விளையாட்டும் விளையாடக்கூடாது. இதுபோன்று விளையாடுவதற்கு மட்டுமே லைசென்ஸ் தரப்பட்டுள்ளதே தவிர கேப்ரே ஆடுவதற்கோ, விபச்சாரம் செய்யவோ லைசென்ஸ் கிடையாது. அது சட்டவிரோதம்.
சில்லறை விற்பனை
பார் நடத்தவே இங்கு உரிமை இல்லை.. மதுபான சில்லறை விற்பனை கூடம்தான் நம்மிடம் உள்ளது.. அங்கேயும் மது அருந்தக்கூடாது. அந்தவகையில் பார் என்பதே இல்லீகல்தான்.. பார்களுக்கு லைசென்ஸ்களும் கிடையாது. எந்தவகையிலும் பார் என்பதே தவறு.. எங்களது உறுப்பினர்களுக்கு மட்டும்தான் மது விற்கிறோம் என்று சொல்லித்தான் பப்களும் நடத்தப்படுகின்றன. அதில் டான்ஸ் ஆடிக் கொள்கிறார்கள்.. அந்தவகையில் பப்களுக்கும் அனுமதி இல்லை என்பதே உண்மை.
தற்போது தி.நகர் ஓட்டலில் வாடகை பெண்கள் குறித்து வீடியோவாகவே வெளியிட்டு ஒருவர் புகார் தந்துள்ளதால், இதுகுறித்து காவல்துறைதான் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. ஆனால், இந்த ஒரு இடத்தில் மட்டும்தான் நடனமாடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. பல இடங்களில் சென்னையிலேயே நடக்கிறது. எனவே, போலீசார் இதுதொடர்பான ரெய்டுகளை நடத்தி, அங்கு சிக்கியுள்ள அப்பாவி பெண்களை மீட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications