Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விபச்சாரம்".. வேளச்சேரியில் 4 பேராமே.. "ஆபத்து" மெசேஜ்.. கடைசியில் பார்த்தால்.. விக்கித்த போலீஸ்

காவலன் ஆப் மூலம், ஆபத்து என்று இளம்பெண் ஒருவர் போலீசாருக்கு புகார் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆபத்தில் இருப்பதாக, காவலன் ஆப் மூலம் போலீசாருக்கு தகவல் வரவும், அதிரடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.. அங்கே நடந்ததுதான் ட்விஸ்ட்..!

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 2 வருடங்களுக்கு முன்பு தமிழக போலீசார் காவலன் SOS" என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.. நைட் நேரத்தில் பாதுகாப்பற்ற சூழலை உணரும் பெண், இந்த ஆப்பில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்தினால் போதும்.

நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்ற தகவல் ஜிபிஎஸ் மூலம் கன்ட்ரோல் ரூமுக்கு போய்விடும்.. அடுத்த சில செகண்ட்டுகளில் போலீசாரின் ரோந்து வண்டி வந்து அங்கேநின்றுவிடும்.

 இங்கிலீஷ் + மெசேஜ்

இங்கிலீஷ் + மெசேஜ்

இந்த SOS பட்டனை அழுத்தும்போது, செல்போனில் உள்ள கேமரா ஆட்டோமேட்டிக்காக 15 விநாடிகளில் வீடியோ எடுத்து அதையும் கன்ட்ரோல் ரூமுக்கு அனுப்பி விடும். செல்போன் சிக்னல் இல்லை என்றாலும் பரவாயில்லை.. மெசேஜ் தானாகவே போய்விடும்.. தமிழ், இங்கிலீஷ் என 2 மொழிகளும் இதில் உண்டு.. அதனால் மொழிப்பிரச்சனை யாருக்கும் கிடையாது.. இந்த ஆப்பில் Registration பக்கத்தில் பெயர், செல்போன் நம்பரை பதிவு செய்து, அடுத்த பக்கத்தில் அட்ரஸ், இ-மெயில் அட்ரஸ் குறித்தால் போதும்.. உங்களுக்கு காவலன் ஆப் ரெடியாகிவிடும்.. ரொம்ப சிம்பிள்!!

 கெஸ்ட் ஹவுஸ்

கெஸ்ட் ஹவுஸ்

இந்த ஆப் அறிமுகப்படுத்திய உடனேயே ஏராளமான பெண்கள் டவுன்லோடு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.. இந்த ஆப், மிகுந்த தைரியத்தையும், நம்பிக்கையையும் பெண்களுக்கு ஏற்படுத்தியும் வருகிறது.. இந்நிலையில், ஒரு அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.. சென்னை வேளச்சேரி தரமணி 100அடி சாலை சீத்தாபதி நகர் விரிவில் சாய் ரமேஷ் கெஸ்ட் ஹவுஸ் இயங்கி வருகிறது.. இங்கிருந்து காவலன் செயலி மூலம் பெண்கள் ஆபத்தில் சிக்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் பரிமாறியுள்ளனர்.

 கோயம்பேடு

கோயம்பேடு

இந்த தகவல், போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு சென்றுள்ளது.. பிறகு, அங்கிருந்து வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் அந்த பெண் குறிப்பிட்ட சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்... அங்கு போலீசாருக்கு போன் செய்த பெண்ணையும், அவரோடு சேர்த்து அங்கிருந்த இன்னொரு பெண் மற்றும் 2 ஆண்களையும் போலீசார் விசாரிப்பதற்காக ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.. அதைக் கேட்டு, போலீசாருக்கே தலைசுற்றி விட்டது.. காரணம், காவலன் ஆப் மூலம் தான் ஆபத்தில் சிக்கியிருப்பதாக கூறியிருந்த பெண், ஒரு பாலியல் தொழிலாளியாம்..

 ஜாலியோ ஜாலி

ஜாலியோ ஜாலி

ஆவடியில் தனியார் கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர் ஒருவர், தன்னுடைய நண்பரோடு சேர்ந்து ஆன்லைன் ஆப் மூலம், புரோக்கர் வாயிலான 2 பெண்களை புக் செய்துள்ளார். கோயம்பேடு சென்று அந்த 2 பெண்களையும் காரில் அழைத்து சென்றுள்ளனர்... ஒரு பெண்ணுக்கு ரூ.11,000வீதம் 2 பெண்களுக்கு ரூ.22,000 பணம் கொடுத்துள்ளார் உதவி பேராசிரியர்... வேளச்சேரியில் ரூம் எடுத்து 4 பேருமே ஜாலியாக இருந்துள்ளனர்.. கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் உதவி பேராசிரியர் அந்த பெண்ணை உறவிற்கு அழைத்துள்ளார்.

பாத்ரூம்

பாத்ரூம்

ஆனால் அந்த பெண்ணோ 2வது முறை உறவுகொள்ள முடியாது என்று மறுப்பு சொல்லவும், உதவி பேராசிரியர் வலுகட்டாயமாக உறவிற்கு பலவந்தபடுத்தியதாக கூறப்படுகிறது. எனவே, அவரிடம் இருந்து தப்பித்து, பாத்ரூம் சென்ற சென்ற பெண், அங்கிருந்து காவலன் செயலி ஆப் மூலம் ஆபத்தில் இருப்பதாக சொல்லி போலீசாரை வரவழைத்தது விசாரணையில் அம்பலமானது. இது குறித்து உதவி பேராசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

 அப்பாவித்தனம்

அப்பாவித்தனம்

அப்போது, "நான் அப்பாவித்தனமாக நம்பி ஏமாந்து விட்டேன் சார்" என்று போலீசாரிடம் புலம்பினாராம்.. இதனைக் கேட்டு அவர் மீது கோபப்படுவதா? சிரிப்பதா? யார் மீது வழக்குப்பதிவு செய்வது? என்று போலீசாரே குழம்பியுள்ளனராம்.... இறுதியாக, 2 பெண்களையும் மயிலாப்பூர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து உதவி பேராசியருக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்துள்ளனர் போலீசார்.. இளம்பெண்களின் பாதுகாப்புக்காக இந்த ஆப்-ஐ தமிழக போலீசார் அறிமுகப்படுத்தினால், கடைசியில் இப்படிப்பட்ட புகார்கள் வருகிறதே என்று புலம்பி தள்ளுகிறார்கள் போலீசார்..!

காவலன் ஆப்

காவலன் ஆப்

இந்த சம்பவம் குறித்து வேளச்சேரி போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "இது ஒரு சட்டசிக்கலான பிரச்சனை. பாலியல் தொடர்பான புகாரை சம்பந்தப்பட்ட பெண் கொடுத்திருந்தால், சட்டப்படி இளைஞர்கள்மீது நடவடிக்கை எடுத்திருக்க முடியும்... ஆனால், விருப்பப்பட்டே அவர்கள் 4 பேரும் சென்றிருக்கிறார்கள்.. பணம் கொடுப்பதில்தான் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது... இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரில் ஒருவர் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

ஆபத்து

ஆபத்து

மற்றொருவர், அந்த பேராசிரியரின் நெருங்கிய நண்பர்.. இவர்கள் 2 பேருமே செல்போனில் உள்ள ஒரு ஆப் மூலம் பணத்தை கட்டியிருக்கிறார்கள்.. அதன்பிறகு, பெண்களை குறிப்பிட்ட இடம் சொல்லி அழைத்தும் சென்றிருக்கிறர்கள்.. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. ஆபத்து என்று தெரிந்ததும் இளம்பெண் ஒருவர் காவலன் ஆப் பயன்படுத்தியதால்தான், எங்களால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிந்தது" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+