சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் கோத்தபயவுக்கு சிவப்பு கம்பளம்.. சென்னையில் கருப்பு கொடி.. இலங்கை தூதரகம் முற்றுகை

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை கருப்பு கொடிகளுடன் முற்றுகையிட்டு ஆவேச முழக்கமிட்டு போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது

3 நாள் பயணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று இந்தியா வந்தார். டெல்லி வந்த அவருக்கு இன்று குடியரசுத் தலைவர் மாளிக்கையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை சந்திக்க போகும் கோத்தபய இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Protest against gotabaya rajapaksas india visit in front of Sri Lankan embassy in Chennai

இந்நிலையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே காரணம் என்றும் அவரை இந்திய மண்ணுக்கு அனுமதிக்க கூடாது என்றும் கோரி தமிழக அமைப்புகள் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே கோத்தபய ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஏராளமனோர் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை கருப்பு கொடிகளுடன் முற்றுகையிட்டு ஆவேச முழக்கமிட்டு போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

English summary
dravidar viduthalai kazhagam Protest against Gotabhaya's india visit in front of Sri Lankan embassy in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X