தப்பிச்சுட்டாரு பிடி அரசகுமார்.. போலீஸ் போட்ட குண்டர் சட்டம் ரத்து! விரைவில் சிறையிலிருந்து விடுதலை?
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பிற அனுமதிகளை பெற்று தருவதாக கூறி தமிழக முழுவதும் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக வசூலித்து மோசடி செய்ததாக பிடி அரசகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திமுக பிரமுகரும், தனியார் பள்ளி கூட்டமைப்பின் நிர்வாகியுமான பி.டி. அரசகுமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தர உயர்வு, கூடுதல் வகுப்பறைகள் அமைக்க அனுமதி, கட்டிடத் திட்ட ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் திமுக செய்தித் தொடர்புக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரான பி.டி. அரசகுமார் கடந்த ஜூன் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே பிடி அரசகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை காவல் ஆணையர், ஜூலை 11 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பிடி அரசகுமாரின் மனைவி கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 2024-25 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு, 2026 ஆம் ஆண்டு வழக்குபப்திவு செய்து, கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை எனவும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது பிடி அரசகுமார் மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "தனியார் பள்ளிகல்வித்துறை செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் எனது கட்சிக்காரர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சி நிதி என்ற பெயரில் பி.டி. அரசகுமார் பணம் வசூலித்ததாக கூறப்படுவது முற்றலும் தவறானது. அதற்கு ஆதாரங்கள் இல்லை.
குண்டர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு அளித்தும், கோரிக்கை மனு மீது காலதாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்களிடம் பி.டி. அரசகுமார் பண மோசடி செய்ததாக யாரும் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. அப்படியிருக்கையில், குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர் குற்றத்தில் ஈடுபடுபவர்களை மட்டுமே குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க முடியும் என்ற விதிக்கு எதிராக இது அமைந்துள்ளது.
எனவே, அவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" வாதிட்டார். தொடர்ந்து தமிழக அரசின் காவல்துறையும் தங்கள் பதில் வாதங்களை முன் வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அரசகுமார் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அரசகுமார் மீதான் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பிற வழக்குகளில் ஜாமீன் பெற்று விரைவில் சிறையிலிருந்து வெளிவருவார் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
