பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி?
சென்னை: அ.தி.மு.க கூட்டணியில் முக்கியக் கட்சிகளான அ.ம.மு.க மற்றும் பா.ம.க ஆகியவையும் இந்தத் தேர்தலில் திமுகவுக்கு சாதகமான சூழலையே உருவாக்கித் தந்துள்ளதாக கூறப்படுகிறது. அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், அவர்கள் கேட்ட முக்கியமான 7 இடங்களைத் தவிர்த்துவிட்டு, மீதமுள்ள 4 இடங்களை அவர்களின் விருப்பமில்லாமல் எடப்பாடி தள்ளிவிட்டார். இதனால் அ.ம.மு.க தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு எதிராக அமமுக வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. காரைக்குடியில் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி ஓடி ஓடி வேலை செய்தாலும், அங்கே நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க பிரிக்கும் வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கே வெற்றியைத் தேடித்தரும்.

அதிமுக கூட்டணி
சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை அசைக்க முடியாது என்பது தெரிந்தும் அங்கே அமமுகவை நிற்க வைத்து பலியாடாக்கிவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி..
திருப்பத்தூர், பூந்தமல்லி, திருச்சி மேற்கு, திருவையாறு போன்ற தொகுதிகளில் அ.ம.மு.க-வுக்குப் பலமே இல்லை என்பது ஊரறிந்த ரகசியம். அதேபோல மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து இயக்குநர் சுந்தர்.சி நின்றாலும், பி.டி.ஆரின் நேர்மையான பிம்பத்திற்கு முன்னால் சுந்தர்.சி எடுபடுவாரா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள்.
பாமக 18 இடங்கள்
பாமகவை பொறுத்தவரை, அவர்கள் 18 இடங்களை வாங்கியிருந்தாலும் 10 இடங்களில் தி.மு.க-வுடன் நேரடியாக மோதுகிறார்கள். பென்னாகரத்தில் பா.ம.க-வை வீழ்த்த, அந்தத் தொகுதியின் பழைய புலியான ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனையே காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது.
காட்டுமன்னார் கோயிலில் வி.சி.க வேட்பாளர் ஜோதிமணி பாமகவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கிறார். விக்கிரவாண்டியில் வன்னியர் வாக்குகள் ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்புக்கு இடையே சிதறுவதால், அங்கே திமுகவின் கை ஓங்குகிறது.
ரிஷிவந்தியம், விருத்தாசலம் தொகுதிகளில் தேமுதிகவின் செல்வாக்கு பாமகவின் வெற்றி வாய்ப்பைப் பறிக்கும் சூழலில் உள்ளது. ராஜபாளையத்தில் சமூக ரீதியான அதிருப்தி அதிமுக கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதை திமுக சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டது.. அதிமுக கூட்டணியில் நிலவும் இந்த உட்பூசல்கள் அனைத்தும் அறிவாலயத்திற்குச் சாதகமான சூழலையே உருவாக்கியுள்ளன..
அதிருப்தியில் அமமுக, பாமக?
எனினும், அமமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் எதிர்கொண்டு வரும் இந்த நெருக்கடியான சூழலைச் சமாளிக்க, அக்கட்சிகள் தற்போது தங்கள் தேர்தல் வியூகங்களை முழுமையாக மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளனவாம்.
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தங்களுக்கு விருப்பமில்லாத தொகுதிகளைத் தள்ளிவிட்டதாகக் கருதும் அமமுக தொண்டர்களின் அதிருப்தியைப் போக்க, டிடிவி தினகரன் நேரடியாகக் களமிறங்கி மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்,,
வெறும் 11 இடங்களாக இருந்தாலும், அதில் தங்கள் பலத்தை நிரூபித்தால் மட்டுமே எதிர்காலத்தில் அரசியல் அங்கீகாரத்தைத் தக்கவைக்க முடியும் என்பதால், 'சமரசமற்ற களப்பணி' என்ற முழக்கத்துடன் அவர்கள் செயல்படத் திட்டமிட்டுள்ளனராம்..
பிடிஆர் - சுந்தர் சி
அதேபோல பாமக உள்ளிட்ட மற்ற கூட்டணிக் கட்சிகள் தொகுதி வாரியாக நிலவும் சமூக ரீதியான அதிருப்திகளையும், உட்கட்சிப் பூசல்களையும் சரிசெய்ய 'கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுக்களை' அமைத்து, வாக்குகள் சிதறாமல் இருப்பதை உறுதி செய்யத் தீவிரமாகப் பணியாற்ற துவங்கிவிட்டனாம்.
திமுகவுக்கு சாதகமான சூழலை முறியடிக்க, ஆளுங்கட்சியின் கடந்த கால வாக்குறுதி மீறல்களை முன்வைத்து வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்வதுடன், குறிப்பாக வன்னியர் வாக்குகள் மற்றும் சமூக வாக்கு வங்கிகள் பிளவுபடாமல் தடுக்க அந்தந்தப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க உள்ளூர் தலைவர்களை முன்னிறுத்தித் தீவிரமான தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.. !!!
-
காட்பாடி சங்கீதாவுக்கு சங்கடம்.. 2 தொகுதியில் வேட்பு மனு.. இப்ப துரைமுருகன் குடும்பத்துக்கு ட்விஸ்ட் -
பிரபல அரசியல்வாதி கரூரில் அரங்கேற்றிய B பிளான்.. தியாகராஜன் மனுவில் அந்த 1 பத்திரம்? ஆடிப்போன அறிவாலயம் -
21 தொகுதிகளில் உதயசூரியனும் இல்லை.. இரட்டை இலையும் இல்லை.. தட்டி தூக்குகிறார்களா விஜய், சீமான்? -
திமுக கூட்டணிக்கு முக்கிய இயக்கம் ஆதரவு.. தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகளை அள்ளலாம்! யாருனு பாருங்க -
பாஜகவையே "டம்மி" ஆக்கிய எடப்பாடி? 27 இடங்களிலும் திமுகவுக்கு கோல்டன் சான்ஸ்! அப்பாவுக்கு "அப்பாடா" -
எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு தந்த "62 பரிசு"? கூட்டணி கட்சிகளுக்கு வேட்டு? சிக்ஸர் அடிக்குதா திமுக -
எஃகு கோட்டையாக நிற்கும் எடப்பாடி தொகுதி.. இங்கு எப்போதும் அதிமுகவின் ஆட்டம் தான்! கடந்து வந்த பாதை -
ஒரே பெயரில் பலர் போட்டி! சென்னையில் விஜய் உள்பட தவெக –அதிமுக வேட்பாளர்களுக்கு சிக்கல்! லிஸ்ட் இதோ -
வானில் தோன்றிய உருவம்.. பழைய ஆம்பாசிடர் காரில் விஐபி!தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் சென்ட்டிமெண்ட் -
மக்கள் நீதி மய்யத்தில் ஒரு 'வசூல்ராஜா'! அந்த ரூ. 30 லட்சம் வளர்ச்சி நிதிக்கு! கறார் காட்டினாரா கமல்? -
ஆடு 1000.. எருமை 55,000, மனுஷன் விலை இவ்வளவுதானா? சீமான் வெளியிட்ட அதிர்ச்சி கணக்கு! #Election2026 -
கிளைமேக்ஸ் இதுதான்.. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று! வந்து குவிந்த 7400+ வேட்புமனுக்கள்












Click it and Unblock the Notifications