"பிடிஆர்".. அகங்காரம், ஆணவம், டாக்டர் பட்டம் வேற.. தியாகராஜன் அவர்களே.. லிஸ்ட்டோடு வந்த பாஜக நாராயணன்
நாராயணன் திருப்பதி நிதியமைச்சர் பிடிஆரை விமர்சித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: பிடிஆருக்கு மிக முக்கிய கேள்வி ஒன்றை தமிழக பாஜக எழுப்பி உள்ளது.. அத்துடன் அக்கட்சியின் சார்பில், தமிழக மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி லிஸ்ட் போட்டு திமுகவை விமர்சித்துள்ளார்..!
Recommended Video
ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு போன்ற நிதி சார்ந்த விஷயங்களில், சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் மத்திய அரசை, கடுமையாகவும், அதேசமயம் ஆதாரப்பூர்வமாகவும் விமர்சித்து வருகிறார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

நிர்மலா
பிடிஆரின் இந்த விமர்சனங்களுக்கு, மத்திய நிதியமைச்சர் நி்ர்மலா சீதாராமனும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பதிலடி தந்தே வருகிறார்.. ஆனாலும், மத்திய நிதியமைச்சருக்கும், மாநில நிதியமைச்சருக்கும், இந்த கருத்து மோதல்கள் அடிக்கடி வெடித்து கிளம்புவது வழக்கம்.. அதேசமயம், பிடிஆர் மீதான கடுப்பும் எரிச்சலும் பாஜகவினருக்கு ஒருபக்கம் இருந்து வருவதாகவும், அதன் வெளிப்பாடாகவே கடந்த வாரம் மதுரை செருப்பு வீச்சு சம்பவம் நடந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது. இப்படி ஒரு பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே, பிடிஆரின் ஒரு பேட்டி பரபரப்பை கிளப்பியது..

"இந்தியா டுடே"
இந்தியா டுடே நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் பிடிஆர் பேசும்போது, "இலவசங்களை தரக்கூடாது என்று சட்டத்தில் சொல்லவில்லையே.. அப்படி தரக்கூடாது என்று சொல்பவர்கள் துறை வல்லுனர்களாக இருக்க வேண்டும். அதாவது பொருளாதார நோபல், பிஎச்டி.. அல்லது இந்த துறைகளில் எங்களை விட சிறந்தவர் என்பதற்கான ஆதாரமாவது இருக்க வேண்டும். ஒருவேளை, உங்களின் சாதனைகள், செயல்பாடுகள் எங்களை விட சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லாம்.. எதுவுமே இல்லாதபோது உங்க பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?" என்பது உட்பட மத்திய அரசை விமர்சித்து பல்வேறு வாதங்களை பிடிஆர் முன்வைத்திருந்தார்.

நாராயணன் திருப்பதி
இந்த விவகாரம் பாஜகவில், எரிகிற எண்ணெய்யில் மேலும் பெட்ரோலை அள்ளி கொட்டியது போல், கொந்தளித்து வருகிறது.. திமுக அரசின் குறைபாடுகளை, அவ்வப்போது புட்டு புட்டு வைத்து வருபவர் பாஜகவின் மாநில துணை தலைவர் திருப்பதி நாராயணன்.. அந்தவகையில், இன்றைய தினம் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு, பிடிஆரையும், திமுக அரசையும் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.. நாராயணன் காட்டத்துடன் பதிவிட்ட அந்த ட்வீட்களின் மொத்த தொகுப்புதான் இவை:

திராவிட மாடலா?
"எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும், யாரிடமும் ஆலோசனை பெற அவசியமில்லை" என்று முழங்கிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் அவர்களே, மின்சார சந்தையில் வாங்கிய மின்சாரத்திற்காக, மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.926.16 கோடியை செலுத்தத் தவறியதால், மின்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்கவும், விற்கவும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்தும் இந்நிலையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது ஏன்? அறிவாலயம் அரசின் நிதி நிர்வாக சீர்கேட்டினால், மின்சாரத்திற்கு கூட தடை ஏற்படும் நிலைக்கு தமிழகத்தை தள்ளி விட்டு விட்டீர்களே? இது தான் திராவிட மாடலா?

35 பைசா + 33 பைசா
"நான் ஏன் மற்றவர்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்? என் முதலமைச்சர் எனக்கு ஒரு பணியினை கொடுத்தார். அதை நான் செவ்வனே செய்து கொண்டிருக்கிறேன்.மத்திய அரசையே மிஞ்சும் அளவிற்கு என் செயல்பாடு உள்ளது. மத்திய அரசின் கருவூலத்திற்கு தமிழகம் அதிக அளவில் நிதியளிக்கிறது.ஒரு ரூபாய் நாம் கொடுத்தால், 33 அல்லது 35 பைசா மட்டுமே திரும்ப பெறுகிறோம். அதற்கு மேல் எங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்? எதன் அடிப்படையில் உங்களுக்காக என் கொள்கையை மாற்றிக்கொள்ள சொல்கிறீர்கள்?

டபுள் டிகிரி
அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஆலோசனை கூறுகிறீர்களா அல்லது பொருளாதாரத்தில் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளீர்களா? அல்லது நோபல் பரிசு பெற்றுள்ளீர்களா? எங்களை விட நீங்கள் தகுதியானவர்கள் என்று சொல்வதற்கு ஏதேனும் உங்களிடத்தில் இருக்க வேண்டும் அல்லவா? அல்லது பொருளாதாரத்தை சிறப்பாக முன்னேற்றியுள்ளீர்கள் என்பதற்கான, கடன்களை குறைத்துள்ளீர்கள் என்பதற்கான,தனி நபர் வருமானத்தை அதிகரித்ததற்கான, வேலை வாய்ப்புகளை உருவாக்கியதற்கான முயற்சிகளை எடுத்தீர்கள் என்பதற்கான ஆதாரம் உங்களிடத்தில் இருந்தால் நிரூபித்து விட்டு பின்னர் எங்களுக்கு அறிவுரை கூறுங்கள்.

அகங்காரம்
நான் ஏன் மற்றவர்களின் கருத்தை கேட்க வேண்டும்?என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர்அவர்கள், மாநில அரசுகள் இலவசங்கள் அளிப்பது குறித்த மத்திய அரசின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். இந்த பதில் ஆணவத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல. முதிர்ச்சியற்ற, தான் மெத்த படித்தவன் என்ற அகங்காரத்தின் வெளிப்பாடு... பிடிஆர் அவர்களே, பொருளாதாரத்தின் அடிப்படையை, குறிப்பாக இந்திய பொருளாதாரத்தை புரிந்து கொள்ளாத அறியாமையின் வெளிப்பாடு. மத்திய அரசின் பொருளாதாரத்தையும்,மாநில அரசின் பொருளாதாரத்தையும் ஒப்பீடு செய்வது வேடிக்கையாக உள்ளது.

அகங்காரம்
மத்திய அரசின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு இல்லையெனில் மாநில அரசினால் பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது என்பதை பொருளாதாரம் அறிந்த பொது அறிவுள்ள அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். இந்நிலையில், மத்திய அரசையே மிஞ்சி விட்டேன் என்று நீங்கள் சொல்வதை கேட்டு சிறு குழந்தை கூட நகைக்கும் என்பதை உணருங்கள். மத்திய அரசிடம் ஒரு ரூபாய் கொடுத்தால், 33 அல்லது 35 காசு மட்டுமே திரும்ப பெறுவதாக கூறியுள்ளீர்கள். கூட்டாட்சி முறை கொண்ட இந்திய பொருளாதாரம் குறித்த புரிதல் தங்களுக்கு இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. தமிழகம் உற்பத்தி மாநிலம் என்பதால், இங்கு வரி வருவாய் அதிகமுள்ளது.

பிடிஆர் அவர்களே...
ஆனால், வரி வருவாய் அல்லாத விவசாயத்தையே பெரிதளவு சார்ந்துள்ள மாநிலங்கள் ஏழை மாநிலங்களாக உருவகப்படுத்தப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவாக உள்ள மாநிலங்கள் கூட உற்பத்தி மாநிலங்கள் போல கடும் உழைப்பை கொடுக்கின்றன என்பதை அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்ற உங்களால் புரிந்து கொள்ள முடியாது போனதில் வியப்பில்லை. 10 லட்சம் ரூபாய் கார் உற்பத்திக்கு 1 லட்சம் ரூபாய் வரி வருவாய் பெற்றேன் என பெருமிதம் கொள்ளும் நீங்கள், அதே பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய பொருட்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களை, ஒரு லட்சம் அல்ல,ஒரு ரூபாய் கூட வரி வசூல் செய்யாமல் நாட்டு மக்களுக்கு உணவுப்பொருட்களை அர்ப்பணிக்கும் மாநிலங்களை சிறுமைப்படுத்துவது நியாயமா?

தியாகராஜன்
நிதியமைச்சர் தியாகராஜன் அவர்களே, வரி வசூல் இல்லாத ஏழை விவசாய மாநிலங்களில் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கு நிதி பகிர்வது சமூக மதிப்பு மிக்கது, சிறப்பு மிக்கது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆகையால், உற்பத்தி மாநிலங்களை விட, ஏழை மாநிலங்களுக்கு அதிக விழுக்காடு நிதிபகிர்வு இருக்கத்தான் செய்யும் என்பதையும், உங்களுக்கு தெரிந்ததை விட மத்திய அரசுக்கு அதிகம் தெரியும் என்பதையும் உணருங்கள்.

ஆணையம்
அதே போல், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, தனி நபர் வருவாய் விதிகளின் படி தான் நிதி பகிர்வுகள் நிதி ஆணையத்தால் முடிவு செய்யப்படுகிறது என்பது அமெரிக்காவில் பயின்ற உங்களுக்கு தெரியவில்லையெனில் எங்களிடமிருந்து கற்று தெளிந்து கொள்ளுங்கள். கடந்த எட்டு வருடங்களில், பொருளாதாரத்தை மேம்படுத்துவதில், கடன்களை குறைப்பதில், வேலைவாய்ப்பை பெருக்குவதில், சொத்துக்களை உருவாக்குவதில், கட்டமைப்புகளை விரிவாக்குவதில், முதலீடுகளை குவிப்பதில் மத்திய அரசு சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

தியாகராஜன்
இந்த செயல்பாடுகளின் வாயிலாகவே தமிழகம் உற்பத்தி மாநிலமாக பெருமிதம் கொண்டிருக்கிறது என்பது, பல ஆண்டு காலம் வெளிநாடுகளில் பல்வேறு நிதி நிறுவனங்களை நிர்வகித்து (?) கொண்டிருந்ததாக கூறிக்கொள்ளும் உங்களுக்கு தெரியாமல் போனதில் வியப்பில்லை. அமைச்சர் தியாகராஜன் அவர்களே, தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை உங்கள் முதலமைச்சர் அளித்திருந்த நிலையில் அதை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு உங்களை சார்ந்தது என்பது நினைவிருக்கிறதா?, குடும்ப பெண்களுக்கு ருபாய் 1000/-, எரிவாயு மானியம் ரூபாய் 100/- கல்வி கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, பெட்ரோல்,டீசலுக்கான மதிப்பு கூடுதல் வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை முனைவர் பட்டம் பெற்ற உங்களால் நிறைவேற்ற முடியவில்லையே?

அட்வைஸ்கள்
பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் நீங்கள் தோல்வியுற்றுள்ள நிலையில், மற்றவர்களின் கருத்தையறிந்து செயல்படுவது தானே சரியானதாக இருக்கும்! உங்களின் நிதி நிர்வாகமின்மை,நிர்வாக சீர்கேடு,முறையில்லா செயல்பாட்டினால் உண்டான தோல்விகள் ஆகியவை, மற்றவர்களின் அறிவுரைகளை நீங்கள் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்பதை உணர்த்துகின்றன.அரசியலமைப்பு சட்டப்படி தான் மத்திய அரசு அறிவுறுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நாராயணன்
நீங்கள் இரட்டை முனைவர் பட்டம் பெற்றவராக இருக்கலாம், ஆனால் நிதி நிர்வாகத்தில் தோல்வியையே தழுவியுள்ளீர்கள் என்பதை உணருங்கள். ஆணவத்தை களைந்து மற்றவர்களின் கருத்துகளை உள்வாங்கி மக்கள் நலன் காக்க செயல்படுங்கள். முனைவர் பட்டங்களும், நோபல் பரிசுகளும் தான் பொருளாதார அறிவுக்கு தகுதிகள் என்ற எண்ணத்தை துறந்து, பொது அறிவு, சமூக சிந்தனை மற்றும் பெருந்தன்மை ஆகியவையே பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் தகுதிகள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார் பாஜகவின் மூத்த தலைவர் நாராயணன்.
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications