யார்க்கர் வந்த பாலை பறக்க விட்ட பிடிஆர்.. "மண்டைல இருந்த கொண்டையை மறந்துட்டீங்களே".. சிக்கிய அதிமுக!
சென்னை: தமிழ்நாடு நிதி நிலையை விமர்சனம் செய்து வெளியான கட்டுரை ஒன்றுக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
சமீபத்தில் இலவச திட்டங்கள் குறித்து வடஇந்திய ஊடகங்களில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது நாடு முழுக்க கவனம் பெற்றது. இதில் பிடிஆர் பேசிய விஷயங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. முக்கியமாக வடஇந்தியர்கள் பலர் அந்த வீடியோவை பகிர்ந்து. வருகின்றனர்
அவர் தனது பேச்சில், எங்களுக்கு அறிவுரை சொல்பவர்களுக்கு முதலில் சட்ட ரீதியான அனுமதி இருக்க வேண்டும். உங்களின் சாதனைகள், செயல்பாடுகள் எங்களை விட சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லாம்.
நீங்கள் கடனை அடைத்துவிட்டீர்கள், பொருளாதாரத்தை சரி செய்துவிட்டீர்கள், தனி நபர் வருமானத்தை உயர்த்திவிட்டீர்கள் என்றால் உங்கள் பேச்சை நாங்கள் கேட்கலாம். அது எதுவுமே இல்லாத போது உங்களின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?, என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு விமர்சனம்
இவரின் பேச்சு வைரலான நிலையில் தமிழ்நாட்டை விமர்சனம் செய்யும் வகையில் சிலர் சமூக வலைத்தளங்களில் தமிழ்நாட்டிற்கு எதிராக சிலர் போஸ்ட் செய்து வந்தனர். முக்கியமாக தமிழ்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாகவும். தமிழ்நாட்டில் நிதி நிலை சரி இல்லை என்றும் விமர்சனம் செய்தனர். அதேபோல் தமிழ்நாட்டில் ஜிடிபிக்கு இணையான பணவீக்கம் அதிகமாக இருப்பதாகவும் விமர்சனம் செய்தனர். இதை பற்றி சில கட்டுரைகளும் கூட வெளியாகின.

விவாதம்
இதற்கு வேறு சில விவாத நிகழ்ச்சிகளில் கூட பிடிஆர் பதில் அளித்து இருந்தார். அதில், முந்தைய அதிமுக ஆட்சி தமிழ்நாட்டை எவ்வளவு கடனில் தள்ளிவிட்டு சென்றது என்று விளக்கம் அளித்து இருந்தார். பாஜக தலைவர் அண்ணாமலையும் தமிழ்நாடு பொருளாதாரம் சரியில்லை. குஜராத், கர்நாடகாவை விட தமிழ்நாடு பொருளாதாரம் மோசமாக உள்ளது என்று கூறி இருந்தார். இதற்கும் பிடிஆர் இதே பதிலை வழங்கி இருந்தார்.

பிடிஆர் பதில்
இந்த நிலையில்தான் வடஇந்திய ஊடகம் ஒன்றில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருப்பதாக கட்டுரை வெளியானது. பாஜக செய்தி தொடர்பாளர் சஞ்சு வெர்மா மூலம் எழுதப்பட்ட கட்டுரை ஆகும் இது. தமிழ்நாடு பொருளாதாரம் மோசமாக உள்ளது. அவர்களிடம் அதிக கடன் உள்ளது. இதுதான் உண்மை. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வேண்டும் என்றே பிற மாநிலங்களுக்கு பாடம் எடுக்கிறார் விமர்சனம் வைக்கப்பட்டு இருந்தது. இதை பிரபல செய்தியாளர் ஒருவரும் பகிர்ந்து இருந்தார்.

தமிழ்நாடு பொருளாதாரம்
இந்த விமர்சனத்திற்கு அமைச்சர் பிடிஆர் சரமாரி பதில் அளித்துள்ளார். அதில், சோ.. கோயபல்ஸ் (அமித் மால்வியா) கும்பல் தங்களுடைய செய்தி தளத்தில், பொருளாதார அறிவற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். அதை அவர்களின் கைக்கூலி பகிர்ந்து உள்ளார். அவர்கள் செய்தது எல்லாம் ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையின் ஒரு மங்கலான காப்பிதான். அந்த அறிக்கை கூட உங்களின் கூட்டணியால் அதிமுக ஆட்சியில் நடந்த அவலங்களைத்தான் குறிப்பிடுகிறது, என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். பாஜகவின் கூட்டணியான அதிமுக செய்த தவறை இவர்களே வெளியிட்டுள்ளதாக பிடிஆர் விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications