இறையன்புவை அழைக்காத ஆளுநர் ரவி.. பிடிஆருக்கு வந்ததே கோபம்! நியாயம்தானே.. "அந்த" விவரம் வெளியே வருமா?
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவியின் செலவு கணக்குகள் குறித்து முறையான விவரங்களை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியே விட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர். என் ரவியின் செலவினங்களில் நிறைய முறைகேடு நடப்பதாக சமீபத்தில் அமைச்சர் பிடிஆர் குற்றஞ்சாட்டி இருந்தார். சட்டசபை பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அட்சய பாத்திராவிற்கு தருகிறேன் என்று கூறி 2 கோடி.. 2 கோடி ஆளுநர் மூலம் வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினேன். அதை ஆராய்ந்து பார்த்தோம்.

அதில் என்ன கண்டுபிடித்தோம் என்றால்.. அட்சய பாத்திரா என்ற காரணத்தை சொல்லி.. கவர்னரின் வங்கி கணக்கிற்கு பணம் மாற்றி உள்ளனர். அதில் இருந்து சில தொகையை அட்சய பாத்திராவிற்கு மாற்றி உள்ளனர். சிலவற்றை வேறு இடங்களுக்கு மாற்றி உள்ளனர். இந்த உண்மையான கணக்கை இப்போதுதான் காட்டி உள்ளனர்.
நான் இரண்டு கருத்துக்களை சொல்கிறேன். மொத்த செலவுக்காக 18. 30 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. அதில் 11.30 கோடி ரூபாய் ஆளுநரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த 11.30 கோடி ரூபாய் எங்கே போனது என்று தெரியவில்லை. அரசுக்கு தெரியாமல் இவ்வளவு பணத்தை செலவு செய்துள்ளனர். இது விதி மீறல். முழுக்க முழுக்க விதி மீறல். அவர்களின் சொந்த கணக்கிற்கு மாற்றி செலவு செய்துள்ளனர்.
இரண்டாவது.. "பெட்டி" செலவு.. அதாவது சின்ன செலவு என்று கூறி இதை செலவு செய்துள்ளனர். பெட்டி செலவிற்கு 11.30 கோடி ரூபாயா? இந்த நிதி எல்லாம் எதோ ஒரு நிறுவனத்திற்கு, சாரிட்டி நிறுவனத்திற்கு வழங்குகின்றனர். மற்ற மாநிலங்களில்.. பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட மாநிலங்களில் ஆளுநருக்கு குறைவாகவே நிதி வழங்குகின்றனர்.
உதாரணமாக பாஜக ஆளும் கர்நாடகாவில் 25 லட்சம்.. கேரளா, மேற்கு வங்கத்தில் 25 லட்சம்.. உத்தர பிரதேசத்தில் 50 லட்சத்தை ஒரு கோடியாக மாற்றி உள்ளனர். நான் ஒரு வருந்தத்தக்க தகவலை தெரிவிக்கிறேன். செப்டம்பர் 21க்கு பின் நமக்கு வந்த பில்லில் இருக்கும் விவரங்கள்
தேநீர் விருந்து - ரூ. 30 லட்சம் ரூபாய்.
குடிமைப்பணி மாணவர்கள் மீட்டிங் - 5 லட்சம் ரூபாய்.
ஊட்டி கலாச்சார நிகழ்வு - 3 லட்ச ரூபாய்.
இதெல்லாம் இந்த பில்லில் வந்து இருக்கவே கூடாது. ஆனால் வந்து இருக்கிறது. ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும் கொடுக்க கூடாது என்று விதியில் இருந்தும், மாதம் மாதம் இவர் ஒரு சிலருக்கு மாத மாதம் கொடுத்துள்ளார். அணைத்து பணியாளர்களுக்கும் விதியை மீறி போனஸ் கொடுத்துள்ளனர். இதில் விதிகளை மீறி கையெழுத்து போட்டுள்ளனர்
எல்லா விதிகளையும் மீறி நிதியை பெற்றுள்ளனர். நான் இங்கே உறுதி கொடுக்கிறேன். இந்த மாதிரியான விதிமுறை மீறல்கள் தடுக்கப்பட்டு.. இனி விதிப்படி மட்டுமே அவர்கள் செலவு செய்ய முடியும் .. அதற்கு ஏற்றபடியே நிதியை ரிலீஸ் செய்வோம் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.
பிடிஆரின் இந்த புகார்களை ஆளுநர் ஆர். என் ரவி நேற்று மறுத்து இருந்தார். டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், பிடிஆர் சொன்னது எல்லாம் அப்பட்டமான பொய். செலவில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று விளக்கம் அளித்து உள்ளார்.
இந்த நிலையில் பிடிஆரின் புகார்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் , ஆளுநர் ஆர். என் ரவி பாஜக கட்சிக்காரர் போல பேசிக்கொண்டு இருக்கிறார். ஆட்சியை விமர்சனம் செய்ய அண்ணாமலை இருக்கிறார். இந்த ஆட்சி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல.
திமுக எதுவும் தவறுக்கு அப்பாற்பட்ட கட்சி கிடையாது. திமுகவை கண்டிப்பாக விமர்சனம் செய்யலாம். ஆனால் அதை செய்ய அண்ணாமலை இருக்கிறார். ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு ரவி செய்ய முடியாது.
ஆளுநருக்கு புகார் இருக்கிறது என்றால் தலைமைச்செயலாளரை அழைத்து கேட்டு இருக்கலாம். இறையன்புவை அழைத்து அரசை பற்றி கேட்டு இருக்கலாம். ஆனால் அதை ஆளுநர் செய்யவில்லையே.
யார் யாருக்கோ டீ பார்ட்டி கொடுக்கிறார். ஆனால் இதை செய்ய மாட்டாரா? பிடிஆர் சொன்னதில் என்ன தவறு?
ஆளுநருக்கு என்று செலவு செய்ய ஒரு தொகையை கொடுக்கிறார்கள். நாங்கள் கொடுக்கும் காசை வாங்கிக்கொண்டு அவர் செலவு செய்கிறார். தமிழ்நாடு மக்களின் வரிப்பணத்தில் வரும் காசை வாங்கிக்கொண்டு அவர் செலவு செய்கிறார்.
அரசு கொடுக்கும் காசை வாங்கிக்கொண்டு அவர் அரசுக்கு எதிராகவே நடக்கிறார். இங்கேயே தமிழ்நாடு என்று சொல்லாதே.. தமிழகம் என்று சொல்லு என்கிறார். அதனால் எல்லோருக்கும் வரும் சாதாரண கோபமே பிடிஆருக்கு வந்தது.

ஆளுநருக்கு ஒரு கணக்கு கொடுத்தால் அதை கணக்கு கேட்க மாட்டார்கள். ஆனால் ஆளுநர் ஆர். என் ரவி பேசிய பேச்சால் ஆளுநர் ரவிக்கு பிடிஆர் செக் வைத்துள்ளார். பிடிஆர் இன்னும் இதில் கணக்கு கேட்க வேண்டும்.
தனக்கு இருக்கும் சங்கடங்களை ஒதுக்கிவைத்துவிட்டு எல்லா தரவுகளையும் பிடிஆர் விசாரிக்க வேண்டும். தமிழ்நாடு மக்களுக்காக பிடிஆர் இதில் விசாரிக்க வேண்டும். ஆளுநர் செலவில் தவறு நடந்து இருந்தால் உண்மையை சொல்லி ஆளுநர் முகத்திரையை பிடிஆர் கிழிக்க வேண்டும், அந்த விவரங்களை வெளியே விட வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications