இப்படி ஒருத்தர்தான் வேண்டும்.. பிடிஆரின் சரமாரி விவாதம்.. கொண்டாடும் வடஇந்தியர்கள்.. டிரெண்டிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலவச திட்டங்கள் குறித்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வட இந்திய ஊடகத்தில் பேசியது இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

    Pakistan போல India மாறாமல் இருக்க இதை செய்ய வேண்டும் - PTR

    இலவச திட்டங்களை அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக வழங்கலாமா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இது பற்றி விவாதிக்க நேற்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை வடஇந்திய ஊடகங்கள் விவாதத்திற்கு அழைத்து இருந்தனர்.

    நேற்று இதில் பிடிஆர் பேசிய விஷயங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அவர் தனது பேச்சில்,

    இலவசங்கள் காரணமாக மக்களின் திறன் வளராது என்று மோடி கருதுகிறார். மக்களின் திறன் அப்படியே இருக்கும். இலவசங்கள் தற்காலிக தீர்வை மட்டுமே தரும். மாறாக திறனை, திறமையை வளர்க்க கூடிய நலத்திட்டங்களை அரசு செய்ய வேண்டும் என்று மோடி நினைக்கிறார் என்று குறிப்பிட்டார்.

    இதற்கு பதில் அளித்த பிடிஆர்.. இதை சொல்பவர்களுக்கு முதலில் சட்ட ரீதியான அனுமதி இருக்க வேண்டும், என்று கூறினார்.

    என்ன சொன்னார்?

    என்ன சொன்னார்?

    தொடர்ந்து பேசியவர், உங்களின் சாதனைகள், செயல்பாடுகள் எங்களை விட சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லலாம். நீங்கள் கடனை அடைத்துவிட்டீர்கள், பொருளாதாரத்தை சரி செய்துவிட்டீர்கள், தனி நபர் வருமானத்தை உயர்த்திவிட்டீர்கள் என்றால் உங்கள் பேச்சை நாங்கள் கேட்கலாம். அது எதுவுமே இல்லாத போது உங்களின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?, என்று குறிப்பிட்டார்.

    டிரெண்ட்

    டிரெண்ட்

    இதையடுத்து தற்போது பிடிஆர் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறார். இவர் வீடியோவை நெட்டிசன்கள் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். பேஸ்புக், ட்விட்டரில் பலரும் இதை பகிர்ந்து வருகிறார்கள். தமிழர்கள் பலரும் நேற்று இரவு இந்த வீடியோவை பகிர்ந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் இருந்து வடஇந்தியர்களும் பிடிஆர் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

    பாராட்டு

    பாராட்டு

    இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை வடஇந்தியர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். இவர் பேச்சை கேளுங்கள். தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் மொத்த நாட்டிற்காக எப்படி பேசி இருக்கிறார் பாருங்கள். இதை வடஇந்தியர்கள் எல்லோரும் கேட்க வேண்டும். இலவசங்கள் ஏன் முக்கியம் என்பதை பிடிஆர் தெளிவாக சொல்லி இருக்கிறார், என்று நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    பாஜக

    பாஜக

    பிடிஆர் ஒரு தனி அமைச்சராக தேசிய அளவில் கவனம் பெறுகிறார். மத்திய அரசின் பொருளாதார கொளக்கியில் இருக்கும் தவறுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறார். இப்படி ஒருவர் வடஇந்தியாவிற்கும் தேவைப்படுகிறார். இவர் சிறப்பாக பேசுகிறார். இவர் படித்தவர் மட்டுமில்லாமல் தனது விஷயங்களை அதிரடியாக, பதில் அளிக்கவே முடியாத அளவிற்கு காட்டமாக சொல்கிறார் என்றும் பாராட்டி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+