சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பப்ஜி மதன்.. விடிய, விடிய கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த போலீசார் திட்டம்!
சென்னை: தருமபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதனை போலீசார் சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் விடிய, விடிய விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை மிகுந்த ஆபாசமான வர்ணனையுடன் யு டியூபில் நேரலை செய்துவந்ததாக யுடியூபர் பப்ஜி மதன் மீது பல்வேறு புகார்கள் வந்தன.
யூ டியூபில் லைவ் வீடியோவில் பெண்களிடம் தவறாக பேசுவது, சிறுமிகளை கெட்ட வார்த்தையில் திட்டுவது என்று மதன் மீது 159 புகார்கள் பதிவாகியுள்ளன.

பப்ஜி மதனின் சித்து விளையாட்டு
தன்னுடைய விளையாட்டை நேரலையாகப் பார்ப்பவர்களிடம் இருந்து பெரும் அளவில் பணம் வாங்கி கோடி, கோடியாக பணம் சம்பாதித்துள்ளார் பப்ஜி மதன். சென்னையில் பங்களா, சொகுசு கார், மனைவி கிருத்திகா வங்கி கணக்கில் ரூ.4 கோடி பணம் என்று பப்ஜி மதன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். புகாரின் பேரில் கடந்த சில நாட்களாக அவரை சைபர் கிரைம் போலீசார் தேடி வந்தனர்.

போலீசுக்கு சவால்
பப்ஜி மதனுக்கு உடைந்தையாக இருந்ததாக அவருடைய மனைவி கிருத்திகா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். ''தன்னை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. தனக்கு நிறைய ஆதரவு இருக்கிறது. முடிந்தால் கைது செய்து பாருங்கள்'' என்று தொடர்ந்து சவால் விட்டு வந்தவர் பப்ஜி மதன். இந்த நிலையில் தருமபுரியில் வைத்து பப்ஜி மதனை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யும்போது கெஞ்சல்
போலீசை பார்த்ததும் கண்ணீர் விட்டு .. அவர்களின் காலை பிடித்து,.. என்னை மன்னிச்சுடுங்க.. என்னை கைது பண்ணாதீங்க என்று கூறி கதறி, கெஞ்சி இருக்கிறார் பப்ஜி மதன். பெண்களை ஆபாசமாகப் பேசுதல், ஆபாசமாகத் திட்டுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடைசெய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.]

விடிய, விடிய விசாரணை?
இந்த நிலையில் பப்ஜி மதன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அவரை கொண்டு வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரனை நடந்து வருகிறது. விடிய, விடிய அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்துவார்கள் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications