18+.. "பூரா ஆபாசம்".. யாரு மதனா? எல்லாமே பச்சை பொய்.. அப்படி எதுவுமே செய்யலை.. கோர்ட்டில் பரபரப்பு
பப்ஜி மதனின் முன்ஜாமீன் மீதான விசாரணை இன்று நடந்தது
சென்னை: யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக ஏற்கனவே கோர்ட் தெரிவித்திருந்தது.. இந்நிலையில், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை மதன் செய்யவே இல்லை என்று மதன் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.
தடை செய்யப்பட்ட ஒரு சேனலை வைத்து கொண்டு, இஷ்டத்துக்கும் ஆட்டம் காட்டி வந்தவர் யூடிபர் மதன். பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் மதன் ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்ததால், அவரின் டாக்சிக் மதன் 18+ யூடியூபுக்கு பக்கத்துக்கு அதிக பார்வையாளர்களை அதிகமாக்கி, 7.8 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் சேர்ந்தனர்.
சின்ன பிள்ளைகள் என்றுகூட பார்க்காமல் ஆபாசமாக, அருவெறுக்கத்தக்க வகையில் பேசி வந்தார். இப்படியே அசிங்கமாக பேசி பேசியே, மாசம் 7 லட்சம் ரூபாய் வரை தன்னுடைய ஆபாச யூடியூப் சேனல்கள் மூலம் காசு பார்த்துள்ளார்.

சேனல்
சிறுவர் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தபோதுதான், மதன் பற்றின விஷயமே வெளியே தெரிய ஆரம்பித்தது.. ஒருகட்டத்தில் எல்லை மீறிய மதனின் யூடியூப் சேனல் மீது, சைபர் க்ரைம் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், மாநிலக் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன.

நீதிபதி
சில தினங்களுக்கு முன்பு, ஜாமீன் கோரி மதன் என்கிற மதன்குமார் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்... அந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, "யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்க கேட்டீங்களா.. ஆரம்பமே கேட்க முடியாத அளவுக்கு இருக்கு.. அந்த பதிவுகளை எல்லாம் கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடுங்கள்" என்று ஆஜரான வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தார்.
Recommended Video

காவல்
இப்போது, மதன் ஜூலை 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் உள்ளார்.. இதனிடையே, மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் அதில் 4 கோடி ரூபாய் இருப்பது தெரிய வந்தது... ஸ்பான்சர் என்ற முறையில் ஏராளமானோர் இந்த பணத்தை அக்கவுண்ட்டில் செலுத்தி இருந்ததும் தெரிய வந்தது.

மதன்
இப்போது கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், மதன் தரப்பிலும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு வழங்கப்பட்டுள்ளது... அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மதனின் வழக்கறிஞர், மதன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றசாட்டுகள் எதுவுமே உண்மையில்லை, பெண்களுக்கு எதிராக கொடுமைகளை அவர் செய்யவே இல்லை என்று வாதாடினார்.

தள்ளிவைப்பு
இதையடுத்து, மதனின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.. அத்துடன் வழக்கு விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.. மதன் கைதானபோது, போலீசாரிடம் "ஆபாசமாக போனில் பேசியது அவ்ளோ பெரிய தப்பா?" என்று கேட்டாராம்.. இப்போது, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை மதன் செய்யவே இல்லை என்று மதனின் வழக்கறிஞர்கள் கோரியுள்ளது, பரபரப்பை கூட்டி வருகிறது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications