"ஆடி" சொகுசு காரில்லைனு சொன்னாரே பப்ஜி மதன் மனைவி.. இப்போ பாருங்க.. வழக்கு தொடர்ந்து கேட்கும் அனுமதி
சென்னை: ஒரே ஒரு ஆடி ஏ 6 கார்தான் இருக்கிறது என்றும் அது சொகுசு காரில்லை என்றும் சொன்ன பப்ஜி மதனின் மனைவி என்ன செய்தார் தெரியுமா?
சேலத்தைச் சேர்ந்த பப்ஜி மதன். இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் விளையாடும் போது ஆபாசமாக பேசி அதனை யூடியூப்பில் பதிவேற்றி பணம் சம்பாதித்து வந்ததாக புகார் எழுந்தது. அவரின் இந்த ஆபாச பேச்சுகள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
இவரும் இவருடைய மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கிருத்திகா நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சொகுசு கார்கள்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் இருக்கும் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இவர் ஆபாசமாக பேசி அதன் மூலம் கிடைத்த வருவாயில் 2 சொகுசு கார்களை வாங்கியதாக சொல்லப்பட்ட நிலையில் அந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவரது யூடியூப், இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டன. நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த கிருத்திகா, செய்தியாளர்களை சந்தித்தார்.

கிருத்திகா
அப்போது அவர் தங்களிடம் சொகுசு கார் இல்லை என்றும் ஆடி ஏ 6 கார் மட்டுமே உள்ளது என்றும் தன் வீட்டு வாசலில் வேறு ஒருவரது சொகுசு கார் நின்றால் அது தனதாகிவிடுமா என கேட்டிருந்தார். இந்த நிலையில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இரண்டு ஆடி ரக கார்களையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என சைதாப்பேட்டை 11 ஆவது நீதிமன்றத்தில் கிருத்திகா வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆடி கார் மீட்டு கொடுங்கள்
அந்த வழக்கில், ஆடி ஏ6 காரை 13 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாகவும் ஆடி ஆர் 8 காரை 47 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சாப்ட்வேர் என்ஜினியரான தானும் தனது கணவர் மதன் யூடியூப் மூலமும் சம்பாதித்த காசில் இந்த கார்கள் வாங்கப்பட்டதாகவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சைபர் கிரைம்
மேலும் இத்தனை நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்த நிலையில் தற்போது அலுவலகம் செல்ல வேண்டியிருப்பதால் அந்த கார்களை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளார். ஆனால் பப்ஜி மதன் மீதான வழக்கில் கார் ஏன் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விளக்கியுள்ளனர்.
Recommended Video

பறிமுதல் ஏன்?
அதாவது ஊரடங்கு காலத்தில் பலருக்கு உதவி செய்வதாக 2,848 பேரிடம் இருந்து ரூ 2.85 கோடி ரூபாயை பெற்று அதில் குறைந்த தொகையில் உதவிகளை செய்துவிட்டு பெரிய தொகையில்தான் இந்த கார் வாங்கப்பட்டது. எனவே மோசடி செய்யப்பட்ட பணத்தில் இந்த கார் வாங்கப்பட்டது என்பதால் இந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications