சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடிக்குது வெயிலு!.. சென்னை மால்கள், தியேட்டர்கள் மூடல்.. ஏசியில் ஓசி காற்று வாங்க செல்வோர் ஏமாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் அடிக்கும் வெயிலுக்கு அங்குள்ள ஏசிகளில் ஓசி காற்று வாங்க வருவோர் ஏமாற்றமடைந்து திரும்பினர்.

Recommended Video

    அடிக்குது வெயிலு!.. சென்னை மால்கள், தியேட்டர்கள் மூடல்.. ஏசியில் ஓசி காற்று வாங்க செல்வோர் ஏமாற்றம்

    எங்குத் திரும்பினாலும் கொரோனா.. கொரோனா.. சீனாவில் 3,123 பேர் பலியாகிவிட்டனர். இந்த வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.

    இந்தியாவில் மொத்தம் 125 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இது வரை டெல்லி, பெங்களூர், மும்பை என மூன்று இடங்களிலும் தலா ஒருவர் உயிரிழந்ததன் மூலம் இந்தியாவில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துவிட்டது.

    உச்சம் பெற்ற சூரியனை செவ்வாய் பார்க்கும் போது கொரோனா தீவிரம் குறையும் - ஜோதிடர் கணிப்புஉச்சம் பெற்ற சூரியனை செவ்வாய் பார்க்கும் போது கொரோனா தீவிரம் குறையும் - ஜோதிடர் கணிப்பு

    சுற்றுலா

    சுற்றுலா

    இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் மட்டும் நடைபெறும் என தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் சுற்றுலாவுக்கு யாரும் கிளம்பி சென்றுவிடாதீர்கள்.

    மூடப்படும்

    மூடப்படும்

    அது போல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடுவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தியேட்டர்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், விளையாட்டு அரங்கங்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள், கிளப்புகள், மால்கள் என அனைத்தும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    உத்தரவு

    உத்தரவு

    சென்னையில் காதலர்கள், பேச்சிலர்களின் பொழுதுபோக்கு அம்சமே மால்கள்தான். ஒரே இடத்தில் ஜாலியாக சுற்றிவிட்டு அங்கேயே சாப்பிட்டுவிட்டு பின்னர் சினிமா பார்த்துவிட்டு தங்கள் பொழுதுகளை கழிப்பது வழக்கம். தற்போது மால்களையும் சினிமா தியேட்டர்களையும் மூட உத்தரவிட்டுள்ளதால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    மக்கள் சோகம்

    மக்கள் சோகம்

    சென்னையில் பிரபல மால்களான ஆம்பா ஸ்கைவாக், வி ஆர் மால், போரம் மால், பீனிக்ஸ் மால் உள்ளிட்டவை இன்று காலை முதல் மூடப்பட்டது. அங்கு பணியாற்றுவோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. மற்றவர்களிடம் அரசு உத்தரவை சொல்லி செக்யூரிட்டிகள் அனுப்பிவிடுகின்றனர். இதனால் மக்கள் சோகமடைந்தனர்.

    நீச்சல் குளம்

    நீச்சல் குளம்

    இதுகுறித்து அந்த மக்களிடம் கேட்டபோது கோடை வெயில் காட்டு காட்டு என காட்டுகிறது. இதை சமாளிக்க மால்களுக்கு சென்றால் காலை முதல் மாலை வரை ஏசி காற்றில் சுற்றிவிட்டு இரவு வீடு திரும்பலாம். ஆனால் இப்போது மால்கள் மூடப்பட்டுவிட்டது. சரி மொக்கை படமாக இருந்தாலும் ஏற்கெனவே பார்த்த படமாக இருந்தாலும் தியேட்டர்களுக்கு செல்லலாம் என்றால் அவைகளும் மூடப்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள். அடிக்கும் வெயிலுக்கு நீச்சல் குளத்திற்குக் கூட செல்ல முடியாத நிலை என புலம்பினர்.

    English summary
    Public concerned about the closure of Malls and Theatres as they couldn't get free AC facility.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X