சென்னை வேளச்சேரி ஏரியில் இடிக்கப்பட உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள்.. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
சென்னை: சென்னை வேளச்சேரி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கரையில் 800-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை தொடங்கி உள்ளனர். இதற்காக வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, பயோமெட்ரிக் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதற்கு வேளச்சேரி ஏரியை சுற்றி உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி ஏரி 1975ம் ஆண்டு வாக்கில் சுமார் 265 ஏக்கர் பரப்பளவு பரந்து விரிந்து காணப்பட்டது. இன்று உருவாகி உள்ள 100 அடி சாலை பகுதியில் ஆதம்பாக்கம் வரை முழுமையாக காணப்பட்டது. ஆனால் வேளச்சேரியில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி காரணமாக ஏரி ஆக்கிரமிப்பிற்கு உள்ளானது. சாலை விரிவாக்கம், பொதுமக்கள் வீடுகள், குடிசை மாற்று வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் உள்பட பல்வேறு காரணங்களால் ஆக்கிரமிப்பு கிடுகிடுவென உயர்ந்தது.

இதனால் 265 ஏக்கர் ஏரி தற்போது வெறும் 55 ஏக்கர் பரப்பளவாக சுருங்கிவிட்டது. வேளச்சேரி இன்று வரை பெருமழை வந்தால் வெள்ளத்தில் மிதக்க முக்கிய காரணம் அது நீர்நிலை பகுதி என்பது தான். அதேபோல் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் காரணமாக அந்த பகுதி வழியாக பள்ளிக்கரணை ஏரி நோக்கி செல்ல வேண்டிய வெள்ள வடிநீர், வெளியேற வழியின்றி குடியிருப்புகளையும் சூழ்கிறது.
அதுமட்டுமின்றி வேளச்சேரி ஏரி முதல் வேளச்சேரி விஜயநகரம் பேருந்து நிலையம் வரை உள்ள பகுதி தாழ்வான பகுதி என்பதால், பெருமழை வந்தால், தண்ணீர் அந்த பகுதி தத்தளிக்கும். அரசு அந்த பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்க புதிய கால்வாய் ஒன்றை உருவாக்கி அதனை வேளச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள கால்வாயுடன் இணைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது.
அதேநேரம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடங்களை மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.19.40 கோடியில் ஏரியில் படகு சவாரியுடன் 1.91 ஏக்கர் பரப்பில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியை கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வேளச்சேரி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கரையில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை தொடங்கி உள்ளார்கள். இதற்காக வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, பயோமெட்ரிக் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் மேற்கொண்டார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளச்சேரி ஜெகநாதபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 400-க்கும் மேற்பட்டோர், வேளச்சேரி 100 அடி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை சாலைக்கு வரவிடாமல் தடுத்து போலீசார் தடுப்புகளை அமைத்தனர். அதையும் மீறி மறியலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தார்கள். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், 2 நாள் கழித்து மீண்டும் வந்து கணக்கெடுப்பு பணியை தொடங்குவதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications