தமிழக அரசின் தரமான செயல்! மனதார வாழ்த்தும் மக்கள்! ஸ்பெஷல் பஸ்களில் 'நோ ஸ்டாண்டிங் ஆல் சிட்டிங்'!
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் 16,888 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் மக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்தாண்டு முன்னேற்பாடுகளை முறையாக செய்திருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கும், தமிழக அரசுக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
இதனிடையே தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பணிபுரியும் ஊர்களுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக 6,000க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் அடுத்த 3 நாட்களுக்கு இயக்கப்படவுள்ளன.

தீபாவளி பண்டிகை
சென்னையில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தீபாவளியை பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த 4 நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கி பெருங்களத்தூர் வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. ஊருக்கு போக பேருந்துகளில் இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஊசலாட்டத்துடன் பேருந்து நிலையங்க்ளுக்கு வந்த மக்களுக்கு அங்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது என்றே கூறலாம்.

முன் திட்டமிடல்
ஆம், கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இந்தாண்டு முறைப்படி முன் திடமிடலுடன் அதிக எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் மக்கள் நிம்மதியாக பயணிக்க முடிந்தது. ஜன்னல் வழியாக கர்சீப்பை வீசி இடம்பிடிக்க தேவையின்றி, பொறுமையாக எல்லோருக்கும் இடம் கிடைக்கும் வகையில் பேருந்துகள் வரிசைக் கட்டி நின்றன. இதனால் சீட் பிடிப்பதில் சண்டை சச்சரவின்றி மகிழ்ச்சியுடன் சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணித்திருக்கிறர்கள்.

அமைச்சர் சிவசங்கர்
இதனிடையே போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டு தெரிவித்துள்ள பலரும், தீபாவளிக்கு முன்னர் சிறப்பு பேருந்துகளை அதிகளவில் இயக்கியது போல், தீபாவளி முடிந்த பின்னரும் நிறைய எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறியிருக்கிறார்கள். அதேபோல் எந்தப் பேருந்திலும் யாரும் நின்று கொண்டு பயணிக்க வேண்டிய அவலம் இல்லை எனவும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்கள்.

முதல்வர் ஆலோசனை
தீபாவளிக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்கும் விவகாரத்தில் ஒரு மாதத்துக்கு முன்பே முதலமைச்சர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தியதோடு, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கினார். அமைச்சர், அதிகாரிகள், ஊழியர்கள் என போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பால் மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிந்தது கவனிக்கத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications