பள்ளிக்கரணையில் பிரபல கோயில் நிலத்தை ஏலம் விட கடும் எதிர்ப்பு... திடீர் போராட்டத்தால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பள்ளிக்கரணை லட்சுமி நாராயணப் பெருமாள் மற்றும் ஆதிபுரீஸ்வரர் கோவில் நிலத்தை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையின் புறநகர் பகுதிகளில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ள பகுதி பள்ளிக்கரணை, ஒரு காலத்தில் சென்னையின் புறநகர் பகுதிகளாக இருந்தவை வேளச்சேரி பகுதியில் ஏற்பட்ட ஐடி துறையின் அசுர வளர்ச்சியால், அங்குள்ள பரந்து விரிந்த ஏரியில் பாதி காணாமல் போய்விட்டது.

public protesting the auction of land of Adipureeswarar temple in pallikaranai Chennai

மிகச்சிறிய கிராமமாக ஒரு காலத்தில் இருந்த பள்ளிக்கரணை, மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக மாறி உள்ளது. அடுக்குமாடி கட்டிடங்களும், வானாளாவிய கட்டிடங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் பள்ளிக்கரணை சாலைகளில் அமைந்துள்ளன. ஓஎம்ஆர் சாலைக்கு அடுத்தபடியாக மிகவும் பிஸியான பகுதியான பள்ளிக்கரணை வளர்ந்துள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கரணையில் லட்சுமி நாராயணப் பெருமாள் மற்றும் ஆதிபுரீஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவில்களுக்கு சொந்தமாக 1.80 லட்சம் சதுர அடி இடத்தை நீதிமன்ற உத்தரவுபடி தரிசாக இருக்கும் கோவில் நிலங்களை ஏலம் விட்டு வருமானம் பெற்று கோவில் நிதி சேர்க்க முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து ரூ.4.60 லட்சம் முன்வைப்பு தொகையுடன் பொது ஏலம் விடுவதற்கான அறிவிப்பினை இந்து அறநிலையத்துறை வெளியிடப்பட்டது. கோவில் பகுதியில் பொது ஏலம் தொடர்பான நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். மறுபக்கம் அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி கமிஷனர் நித்யா தலைமையில் வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் பொது ஏலம் நடத்த தயாரானார்கள்.

இதனிடையே பள்ளிக்கரணை கோவிலுக்கு நிலம் கொடுத்தவர்களின் வம்சாவளியினர், இந்து அமைப்பினர், பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பொது ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பள்ளிக்கரணை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க காரணம் கேட்டார்.

அப்போது பொதுமக்கள் தரப்பில் கோவில் கொடுத்த நிலத்தில் திருமண மண்டபம், கல்விக்கூடம் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துக்களை முன் வைத்தனர். இது குறித்த காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. உடனடியாக கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சிவா, இன்ஸ்பெக்டர் தன்ராஜ் மற்றும் போலீசார் சென்று விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்த ஏலம் விடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஏலம் ஒத்தி வைக்கப்பட்டதால் போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+