Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுமைப்பெண் திட்டத்தால் நடந்த மிகப்பெரிய மாற்றம்.. கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் மாதம் ரூ. 1000 கல்வி உதவித் தொகை வழங்கும் "புதுமைப் பெண்" திட்டம் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதாவது, புதுமைப்பெண் திட்டத்தால் 2,30,820 மாணவிகள் 2023 ஆண்டு இறுதிக்குள் பலன் அடைந்துள்ளனர். இத்திட்டம் அறிமுகம் செய்த 2022-2023 கல்வி ஆண்டில் மட்டும் 13,681 மாணவிகள் அதிகமாக உயர் கல்வி பெறுவதற்கான உந்துதலை புதுமைப் பெண் திட்டம் ஏற்படுத்தி உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

pudhumai pen tamil nadu tn government

ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள், பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் உயர்கல்வி படிக்க முடியாமல் போகிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் கல்லூரிகளில் சேர்வதை உறுதி செய்யும் விதமாக மாதம் 1000 ரூபாய் வழங்கும் வகையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற புதுமைப்பெண் திட்டம் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டது.

ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் நீட்டித்து உத்தரவிட்டது தமிழக அரசு. இதன்மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளும் கூடுதலாக பயனடைந்து வருகின்றனர்.

pudhumai pen tamil nadu tn government

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி புதுமைப் பெண் திட்டம் மூலம், நிதி உதவியாக ரூ.1000, யுஜி பட்டப்படிப்பு/ டிப்ளமோ/ ஐடிஐ/ வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட படிப்பை முடிக்கும் வரை பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை நேரடியாக மாணவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

ரிப்போர்ட் கார்டு: இந்நிலையில், புதுமைப்பெண் திட்டம், மாணவிகள் அதிகமாக உயர்கல்வி பெற வழிவகை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என தமிழ்நாடு அரசு ரிப்போர்ட் கார்டை வெளியிட்டுள்ளது.

மாநில திட்டக் குழு, 34 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 5,095 மாணவர்களை உள்ளடக்கி, 8 மாவட்டங்களில் நவம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை புதுமை பெண் திட்டத்தின் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தியது. புதுமை பெண் திட்டத்தின் செயல்பாடுகள், சவால்கள், விழிப்புணர்வு நிலைகள், பயன்பாட்டு முறைகள் மற்றும் சமூக-பொருளாதார தாக்கம் ஆகியவற்றை மதிப்பிடுவதே ஆய்வின் நோக்கங்களாகும். இந்தச் சலுகைகளைப் பெறாத மாணவர்கள் மற்றும் குடும்பங்களின் சவால்களும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

pudhumai pen tamil nadu tn government

அதன்படி, 2023-ஆம் ஆண்டு இறுதிக்குள் இத்திட்டத்தின் மூலம் 2,30,820 பயணடைந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் சேலம் மாவட்டத்தையும், அதைத் தொடர்ந்து நாமக்கல் மற்றும் தர்மபுரியைச் சேர்ந்தவர்கள். 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை 13,681 உயர்ந்துள்ளது.

கல்லூரி நிறுவனங்கள் வாரியான பயனாளிகள்:

45% பேர் அரசு கல்லூரிகளிலும், 28% பேர் தனியார் கல்லூரிகளிலும், 22% அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் பயில்கின்றனர்.

இத்திட்டம், குறைந்த வருமானம் கொண்ட பின்னணியில் உள்ள பெண்களை, பொறியியல் படிப்பைத் தொடரவும், தடைகளை உடைத்து, தரமான கல்வி மற்றும் சிறப்பான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்கவும் வழிவகுக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடப்பிரிவு வாரியான பயனாளிகள்:

எம்.பி.பி.எஸ் - 0.37%
எல்.எல்.பி - 0.29%
டிப்ளமோ - 5.5%
பி.இ போன்ற தொழில்முறை படிப்புகள் - 9.7%
பி.எஸ்.சி (கணினி அறிவியல்) - 14.26%
பி.காம் - 18.79%

சமூக பிரிவு வாரியான பயனாளிகள்:

புதுமைப் பெண் திட்ட பயனாளிகளில் சுமார் 90.2% பேர் பிசி, எம்பிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள். மேலும் இது ஓடுக்கப்பட்ட பிரிவினருக்கான கல்வி வாய்ப்பை அதிகரித்துள்ளது.

எஸ்.டி 1.3%
ஓ.சி 0.7%
எஸ்சி 30.6%
எம்பிசி 36.7%
பிசி 30.6%
சமூக பிரிவைச் சொல்ல விரும்பாதோர் 0.1%

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+